ஏழை பெண்களுக்கு விலையில்லா கோழிக்குஞ்சுகள் வழங்கிய கே.சி.கருப்பணன்

ஏழை பெண்களுக்கு விலையில்லா கோழிக்குஞ்சுகள் வழங்கிய கே.சி.கருப்பணன்

ஈரோடு

ஈரோடு மாவட்டம், பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரத்து 646 பெண்களுக்கு, ரூ.40.35 லட்சம் மதிப்பிலான 41 ஆயிரத்து 150 விலையில்லா அசில் இன நாட்டுக்கோழி குஞ்சுகளை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

ஏழை பெண்களுக்கு விலையில்லா கோழிக்குஞ்சுகள் வழங்கிய கே.சி.கருப்பணன்

இதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு தலா 25 கோழிக்குஞ்சுகளை வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களிடம் பேசிய அவர், தமிழக முதலமைச்சர் கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக கிராமப்புற மகளிரை ஊக்குவித்து, அதன் மூலம் புறக்கடை கோழி வளர்ப்பை பேணிக்காக நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாக தெரிவித்தார்.

ஏழை பெண்களுக்கு விலையில்லா கோழிக்குஞ்சுகள் வழங்கிய கே.சி.கருப்பணன்

மேலும், ஈரோடு மாவட்டத்தில்‌ இத்திட்டத்தின்‌ மூலம் 16 ஆயிரத்து 650 பெண்கள் ‌ தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ஒரு நாள்‌ பயிற்சி வழங்கி, பின்னர்‌ 2 ஆயிரத்து 45 ரூபாய் மதிப்பிலான தலா 25 அசில்‌ நாட்டு இன கோழிக்குஞ்சுகள்‌ 100சதவீத மானியத்தில்‌ வழங்கப்படுவதாக தெரிவித்தார்.