புதிய கட்டுப்பாடுகளால் ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி சந்தை மூடல்… 10 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு…

 

புதிய கட்டுப்பாடுகளால் ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி சந்தை மூடல்… 10 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு…

ஈரோடு

ஈரோட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக புகழ்பெற்ற கனி மார்க்கெட் ஜவுளி சந்தை மூடப்பட்டதால், சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

ஈரோடு மாநகர் பகுதியில் புகழ்பெற்ற கனி மார்க்கெட் ஜவுளி சந்தை செயல்பட்டு வந்தது. இங்கு தினசரி சந்தை கடைகள் 254, வார சந்தை கடைகள் 700 கடைகள் செயல்பட்டு வந்தன. இதேபோல், சென்ட்ரல் மார்க்கெட், அசோகபுரம் மார்க்கெட், கருங்கல்பாளையம் ஆஞ்சநேயர் மார்க்கெட் என மொத்தம் 3 ஆயிரம் கடைகள் உள்ளன.

புதிய கட்டுப்பாடுகளால் ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி சந்தை மூடல்… 10 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு…

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இங்கு மொத்த வியாபாரம் நிறுத்தப்பட்டு, சில்லறை வியாபாரம் மட்டும் நடந்து வந்தது. இந்த நிலையில், கடந்த 6ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால் கனி மார்க்கெட் ஜவுளி சந்தையில் வரும் 20ஆம் தேதி வரை அடைக்க முடிவு செய்யப்பட்டு தற்போது அடைக்கப்பட்டுள்ளது. தற்போது பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளதால், இந்த தொழிலை நம்பியுள்ள சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

கொரோனா தாக்கத்தால் ஏற்கனவே ஜவுளி தொழில் நடைவடைந்துள்ள சூழலில், தமிழக அரசின் இ-பாஸ் உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளால் வெளி மாநில வியாபாரிகள் ஈரோட்டுக்கு வருவதில்லை என்றும், இதனால் ஈரோடு கனிமார்க்கெட்டில் ஜவுளி மொத்த வியாபாரம் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக, வாரச்சந்தை தலைவர் செல்வராஜ் தெரிவித்து உள்ளார்.

புதிய கட்டுப்பாடுகளால் ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி சந்தை மூடல்… 10 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு…

மேலும், சில்லறை வியாபாரம் மட்டும் நடந்து வந்த சூழலில், தற்போது தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக வரும் 20ஆம் தேதி தேதி வரை தினசரி கடைகள் மூடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்த செல்வராஜ், இதனால் நாள்தோறும் ரூ.80 லட்சம் வீதம் 15 நாட்களில் ரூ.10 கோடிக்கு மேல் வர்த்தகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக கூறினார்.

மேலும், இந்த தொழிலை சார்துள்ள 10 ஆயிரம் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக தெரிவித்த செல்வராஜ், எனவே அரசு சில தளர்வுகளுடன் காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை கடைகள் செயல்பட அனுமதித்தால், ஓரளவு வாழ்வாதாரத்தை காப்பாற்ற முடியுமென கூறினார்.