“பூச்சி தாக்குதல் குறித்து விவசாயிகளுக்கு நேரில் ஆலோசனை” – ஆட்சியர் கதிரவன்

“பூச்சி தாக்குதல் குறித்து விவசாயிகளுக்கு நேரில் ஆலோசனை” – ஆட்சியர் கதிரவன்

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று ஆட்சியர் கதிரவன் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில், மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் என 15 இடங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கைளை ஆட்சியரிடம் தெரிவித்தனர்.

“பூச்சி தாக்குதல் குறித்து விவசாயிகளுக்கு நேரில் ஆலோசனை” – ஆட்சியர் கதிரவன்

இந்த கூட்டத்தில் பேசிய ஆட்சியர் கதிரவன், ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு நவம்பர் மாதம் வரை 78 ஆயிரத்து 759 ஹெக்டர் பரப்பில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளதாகவும், இதற்கு தேவையான உரங்கள் மற்றும் இடுபொருட்கள் போதுமான அளவு
இருப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், நெல் பயிர்களில், பூச்சிநோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், நடப்பு வாரத்திலிருந்து மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் சென்று விவசாயிகளை நேரடியாக சந்தித்து ஆலோசனை வழங்கும் வகையில்,‘உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம்” செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

“பூச்சி தாக்குதல் குறித்து விவசாயிகளுக்கு நேரில் ஆலோசனை” – ஆட்சியர் கதிரவன்

அத்துடன், சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிருக்கு தற்பொழுது பயிர் காப்பீடு செய்யப்பட்டு வருவதாக கூறிய ஆட்சியர், வரும் 30ஆம் தேதி இதற்கு கடைசிநாள் என்றும் தெரிவித்தார்.