அதிமுக இளைஞர் பாசறை ஆலோசனை கூட்டம்; 2 எம்எல்ஏ-க்கள் பங்கேற்பு

 

அதிமுக இளைஞர் பாசறை ஆலோசனை கூட்டம்; 2 எம்எல்ஏ-க்கள் பங்கேற்பு

ஈரோடு

ஈரோடு பெரியார் நகர் பகுதியில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக அக்கட்சி எம்எல்ஏ-க்கள் கே.வி.ராமலிங்கம் மற்றும் கே.எஸ். தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

அதிமுக இளைஞர் பாசறை ஆலோசனை கூட்டம்; 2 எம்எல்ஏ-க்கள் பங்கேற்பு

அப்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்த்தல் உள்ளிட்ட பணிகளில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து, கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர். இந்த கூட்டத்தில், பகுதி செயலாளர் மனோகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.