ஈரோடு- கோபி பகுதியில் கொள்ளையடிக்க சதி திட்டம் – 5 பேர் கைது

 

ஈரோடு- கோபி பகுதியில் கொள்ளையடிக்க சதி திட்டம் – 5 பேர் கைது

ஈரோடு

கோபிச்செட்டிப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் சதித் திட்டம் தீட்டிய சென்னையை சேர்ந்த 5 பேரை போலீசார் அதிரடியாக கைதுசெய்தனர். கோபிசெட்டிபாளையத்தை அடுத்த பா.வெள்ளாபாளையம் கீழ்பவானி கிளை வாய்க்காலில் அதே பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர் செல்வபாண்டி குளித்துள்ளனர்.

ஈரோடு- கோபி பகுதியில் கொள்ளையடிக்க சதி திட்டம் – 5 பேர் கைது

அப்போது, வாய்க்காலில் குளித்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், இப்பகுதியில் உள்ள பணக்காரர்கள் வீட்டில் கொள்ளையடிப்பது குறித்து சதித் திட்டம் தீட்டியதை கேட்டுள்ளனர். மேலும், அவர்கள் வந்த வாகனத்தில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததையும் பார்த்துள்ளனர். இதனையடுத்து கோபாலகிருஷ்ணன் கோபி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து, உடனடியாக காவல்துறையினர் சம்பவ

ஈரோடு- கோபி பகுதியில் கொள்ளையடிக்க சதி திட்டம் – 5 பேர் கைது

இடத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்த 5 பேரை மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்த சத்யா(26), ராமசந்திரன் (28),சீதாராமன்(36), சுடலைராஜா(26) மற்றும் மணிகண்டன்(24) என்பது தெரியவந்தது. மேலும், கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் பட்டாக்கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர

ஈரோடு- கோபி பகுதியில் கொள்ளையடிக்க சதி திட்டம் – 5 பேர் கைது

ஆயுதங்களுடன் சென்னையிலிருந்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து 5 பேரையும் கைதுசெய்த போலீசார் அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். போலீசார் துரிதமாக செயல்பட்டு கோபிசெட்டிபாளையம் பகுதியில்
நடக்கவிருந்த கொள்ளை.தடுத்த நிகழ்வை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி உள்ளனர்.