லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் இன்று முதல் வர்த்தகத்திற்கு கிடைக்காது… மும்பை பங்குச் சந்தை தகவல்

 

லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள்  இன்று முதல் வர்த்தகத்திற்கு கிடைக்காது… மும்பை பங்குச் சந்தை தகவல்

லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் இன்று முதல் வர்த்தகத்திற்கு கிடைக்காது என்று மும்பை பங்குச் சந்தை அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

தனியார் வங்கியான லட்சுமி விலாஸ் வங்கி தமிழகம் உள்பட 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 563 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. 94 வருடமாக செயல்பட்டு வரும் லட்சுமி விலாஸ் வங்கியின் நிதி நிலவரம் கடந்த சில ஆண்டுகளாக கவலை அளிக்கும் விதத்தில் இருந்து வந்தது. லட்சுமி விலாஸ் வங்கியின் நிதி நிலவரம் மோசமான நிலையை எட்டியதை அடுத்து ரிசர்வ் வங்கியின் பரிந்துரை அடிப்படையில் அந்த வங்கியின் வர்த்தகத்துக்கு மத்திய அரசு ஒரு மாதம் (நவம்பர் 17 முதல் டிசம்பர் 16 வரை) தடை விதித்தது.

லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள்  இன்று முதல் வர்த்தகத்திற்கு கிடைக்காது… மும்பை பங்குச் சந்தை தகவல்
மும்பை பங்குச் சந்தை

மேலும் லட்சுமி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து ரூ.25 ஆயிரத்துக்கு மேல் எடுக்க முடியாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனால் அந்த வங்கியில் பணத்தை போட்டவர்கள் தங்களது திரும்ப கிடைக்குமா என்று பயம் கொள்ள தொடங்கினர். ஆனால் வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது. மேலும் லட்சுமி விலாஸ் வங்கியை சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட டி.பி.எஸ். வங்கியுடன் இணைக்க மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்தது.

லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள்  இன்று முதல் வர்த்தகத்திற்கு கிடைக்காது… மும்பை பங்குச் சந்தை தகவல்
டி.பி.எஸ்.-லட்சுமி விலாஸ் வங்கி இணைப்பு

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று லட்சுமி விலாஸ் வங்கி-டி.பி.எஸ். வங்கி இணைப்பு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்தது. இந்த செய்தி வெளியான சிறிது நேரத்தில், நவம்பர் 26ம் தேதி (இன்று) முதல் லட்சுமி விலாஸ் வங்கி நிறுவன பங்குகள் வர்த்தகத்துக்கு கிடைக்காது என்று மும்பை பங்குச் சந்தை அறிவித்தது. மும்பை பங்குச் சந்தையின் இந்த அறிவிப்பால் லட்சுமி விலாஸ் பங்குகளில் முதலீடு செய்தவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். லட்சுமி விலாஸ் வங்கி வர்த்தகத்துக்கு தடை விதித்தது முதல் பங்குச் சந்தையில் அந்த வங்கி பங்கு விலை கடும் வீழ்ச்சி கண்டது. நேற்று மும்பை பங்குச் சந்தையில் லட்சுமி விலாஸ் வங்கி பங்கு விலை ரூ.7.65ல் முடிவுற்றது.