“காலால் இயக்கும் கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரம்” : களத்தில் அசத்தும் மக்கள் நீதி மய்யம்!

திரு. பி.ஜெகன், திரு. எஸ்.வெஸ்லி, திரு. சி.சாமுவேல் ஆகியோரது ஏற்பாட்டில் காலால் இயக்கும் கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரம் பொறுத்தப்பட்டது.

கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்து வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இருப்பினும் அரசுடன் இணைந்து பல்வேறு கட்சிகளும் பாதிக்கபட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவி வருகின்றனர்.

இந்நிலையில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் காலால் இயக்கும் கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரங்களை முற்றிலும் இலவசமாக பொறுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரானா நோய் தொற்றோடு வாழப் பழகச் சொல்லி மத்திய, மாநில அரசுகள் தங்களின் பொறுப்புகளை தட்டிக் கழித்து வரும் வேளையில் மக்கள் நலனில் அக்கறை கொண்டு மக்களின் உடல்நலத்திலும், பாதுகாப்பிற்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் அதிக முக்கியத்துவம் அளித்து மிகுந்த கவனம் செலுத்திட வேண்டும் என மரியாதைக்குரிய தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

தலைவரின் கண்டிப்பான அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் மற்ற அரசியல் கட்சிகளுக்கெல்லாம் முன்மாதிரியாக, தமிழகத்திலேயே முன்னோடியாக மக்கள் அதிகம் வருகை தரும் இடங்களில் காலால் இயக்கும் கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரங்களை முற்றிலும் இலவசமாக பொறுத்தும் பணிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் திருமதி. பிரியதர்சினி உதயபானு அவர்கள் தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் நேற்று முன்தினம் முதல் மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று (01.06.2020) மாலையில் வடசென்னை மேற்கு மாவட்டம், வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கெல்லீஸ், அயனாவரம், வில்லிவாக்கம் பகுதிகளில் தொழிலாளர்கள் அணி மாநில செயலாளர் திரு. சு.ஆ.பொன்னுசாமி அவர்களின் தலைமையில், மாவட்டச் செயலாளர் திருமதி. பிரியதர்சினி உதயபானு அவர்களின் முன்னிலையில் நகரச் செயலாளர் திருமதி. எஸ்.தமிழ்ச்செல்வி, வட்டச் செயலாளர்கள் திரு. ஜிம்.கே.மாடசாமி, திரு. விஸ்வநாதன் மற்றும் கட்சியின் செயல்வீரர்கள் திரு. பி.டி.குப்புசாமி, திரு. வி.சரவணன், திரு. பி.ஜெகன், திரு. எஸ்.வெஸ்லி, திரு. சி.சாமுவேல் ஆகியோரது ஏற்பாட்டில் காலால் இயக்கும் கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரம் பொறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இளைஞரணி மாவட்டச் செயலாளர்  கிஷோர் சுப்பிரமணியம், நகரச் செயலாளர்  கிஷோர் வின்சென்ட்,  வி.மோசஸ், வட்டச் செயலாளர்கள் ஹரிதாஸ்,  மோகனசுந்தரி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேடவாக்கம் டேங்க் சாலை, கெல்லீஸ் பகுதியில் உள்ள “பால்ராஜ் பல்பொருள் அங்காடி” உரிமையாளர் திரு. மகேஷ் அவர்கள் காலால் இயக்கும் கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரம் பொறுத்தும் பணிக்கு இடம் தந்து ஒத்துழைப்பு அளித்து வரவேற்றார்” என்று குறிப்பிட்டுள்ளது. இதற்கான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Most Popular

`வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு; ஏரியா தகராறு!’- கோவில்பட்டியை பதறவைத்த இளைஞரின் கொலை

வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருந்ததால் கணவனை மனைவி பிரிந்து சென்றார். தனியாக இருந்த கணவன் ஏரியா தகராறில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கோவில்பட்டியில் நடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதிநகர் கருமாரியம்மன்...

காங்கிரசின் இந்துத்துவா ஆதரவு நிலைப்பாட்டை ராகுல், பிரியங்கா காந்தி பின்பற்றுகிறார்கள்.. பினராயி விஜயன்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜைக்கு காங்கிரசின் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் வாழ்த்து தெரிவித்தது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என செய்தியாளர்களின் சந்திப்பின் போது கேரள...

ராமர் கோயில் பூமி பூஜை.. மக்களின் மத உணர்வுகளை வெளிப்படையாக சுரண்டுவது.. சீதாராம் யெச்சூரி ஆவேசம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி ராமர் கோயில் பூமி பூஜை விழாவை கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், இந்த பூமி பூஜை விழா...

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் தந்தைவழி உறவுகளால் நன்மைகள் வந்து சேரும்!

இன்றைய ராசிபலன்கள் 7.08. 2020 (வெள்ளிக்கிழமை) நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை ராகு காலம் 10.30 மணி முதல் 12 வரையில் எமகண்டம்...