“நாளை தேர்தல் பரப்புரையை தொடங்குகிறேன்” – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

 

“நாளை தேர்தல் பரப்புரையை தொடங்குகிறேன்” – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

சட்டமன்றத் தேர்தல் பரப்புரையை நாளை முதல் தொடங்கவிருப்பதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய முதல்வர், மின் துறையை தனியார் மயமாக்கும் எந்த எண்ணமும் அரசிடம் இல்லை. விலை உயர்த்தப்பட்ட கேஸ் விலையை குறைக்க மத்திய அரசிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும். எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முழு நிலமும் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இன்னும் அதை எடுத்துக் கொள்ளவில்லை. நிலம் முழுமையாக கையகப்படுத்தப்பட்டு விட்டது என தெரிவித்தார்.

“நாளை தேர்தல் பரப்புரையை தொடங்குகிறேன்” – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

மேலும், சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை நாளை முதல் எடப்பாடி தொகுதியில் இருந்து தொடங்கவிருக்கிறேன் என்றும் நாட்கள் குறைவாக இருக்கின்ற காரணத்தால் தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளேன் என்றும் அவர் அறிவித்தார். தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பரப்புரையை தொடங்கிவிட்டன. கொரோனா காலத்தில் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்த நிலையில் தடையை மீறி பரப்புரை கூட்டங்கள் நடத்தப்பட்டது.

இதனையடுத்து, டிச.19 முதல் அரசியல், பொழுது போக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களை நடத்தலாம் என தமிழக அரசு அறிவித்தது. இத்தகைய சூழலில் தான், நாளை முதல் பிரச்சாரத்தை தொடங்கவிருப்பதாக முதல்வர் அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.