மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உடன் ஈபிஎஸ் சந்திப்பு!

 

மத்திய  இணை அமைச்சர் எல்.முருகன் உடன் ஈபிஎஸ் சந்திப்பு!

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இன்று சந்திக்கிறார்.

மத்திய  இணை அமைச்சர் எல்.முருகன் உடன் ஈபிஎஸ் சந்திப்பு!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் நேற்று பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்துப் பேசினர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அறையில் நடந்த இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்த நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தியதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்த சசிகலா மீண்டும் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் தொலைபேசியில் பேசுவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

மத்திய  இணை அமைச்சர் எல்.முருகன் உடன் ஈபிஎஸ் சந்திப்பு!

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி , சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் கூட்டணிக்காக பிரச்சாரம் செய்ததற்கும் நன்றி தெரிவித்ததுடன், மேகதாது அணை கட்டக்கூடாது என்று பிரதமரிடம் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் உடன் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இன்று சந்தித்து பேசுகிறார். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி மற்றும் அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்ததில், தமிழகத்தின் பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.