‘எடப்பாடியில் போட்டியிட’ வேட்பு மனு தாக்கல் செய்கிறார் ஈபிஎஸ்!

 

‘எடப்பாடியில் போட்டியிட’ வேட்பு மனு தாக்கல் செய்கிறார் ஈபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளில் அதிரடியாக களமிறங்கிய அதிமுக, பாஜக மற்றும் பாமகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மொத்தம் 177 தொகுதிகளில் அதிமுக தனது வேட்பாளர்களை களமிறக்குகிறது. கடந்த இரண்டு முறையாக ஆட்சியை கோட்டைவிட்டு இந்த முறை எப்படியாவது கைப்பற்றி விடவேண்டுமென துடித்துக் கொண்டிருக்கும் திமுகவுடன் நேரடியாக 130 தொகுதிகளில் அதிமுக மோதுகிறது.

‘எடப்பாடியில் போட்டியிட’ வேட்பு மனு தாக்கல் செய்கிறார் ஈபிஎஸ்!

இவ்வாறு தேர்தல் களம் அனல் பறந்துக் கொண்டிருக்கும் வேளையில், வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பணியும் தொடங்கின. முதல் நாளே, போடி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓபிஎஸ் வேட்பு மனு தாக்கல் செய்து பிள்ளையார் சுழி போட்டு வைத்தார். அவரைத் தொடர்ந்து, அதிமுக வேட்பாளர்கள் பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

‘எடப்பாடியில் போட்டியிட’ வேட்பு மனு தாக்கல் செய்கிறார் ஈபிஎஸ்!

இந்த நிலையில், முதல்வர் பழனிசாமி நாளை மதியம் 1 மணிக்கு எடப்பாடி தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்தபின் நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. வேட்பு மனு தாக்கலுக்கு நாளையே கடைசி நாள் என்பதால், மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் உள்ளிட்ட பலர் நாளை தான் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.