முதல்வர் வேட்பாளர் யார்? ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியே 2ம் கட்ட ஆலோசனை!

 

முதல்வர் வேட்பாளர் யார்? ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியே 2ம் கட்ட ஆலோசனை!

அதிமுகவில் நீடிக்கும் முதல்வர் வேட்பாளர் விவகாரம் தொடர்பாக முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓபிஎஸ்சும் 2ம் கட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக யார் போட்டியிடுகிறார்கள் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது. பெரும்பான்மையான அமைச்சர்களும் மூத்த நிர்வாகிகளும் ஈபிஎஸ் பக்கமே இருப்பதால் அவர் தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என தரப்பும், தர்ம யுத்தத்தில் ஓபிஎஸ் ஜெயித்துக் காட்டுவார் என மற்றொரு தரப்பும் கூறிவருகிறது.

முதல்வர் வேட்பாளர் யார்? ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியே 2ம் கட்ட ஆலோசனை!

இந்த முதல்வர் வேட்பாளர் பிரச்னைக்கு அதிமுக மூத்த நிர்வாகிகளாலேயே முற்றுப்புள்ளி வைக்க முடியாத சூழலில், நாளை மட்டும் எப்படி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் அமைச்சர்களோ, திட்டமிட்டப்படி நாளை அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கின்றனர். இதனிடையே இன்று காலை முதல் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் தனித்தனியே தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்வர் வேட்பாளர் யார்? ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியே 2ம் கட்ட ஆலோசனை!

இந்த நிலையில், முதல்வர் பழனிசாமி சென்னை இல்லத்தில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் உள்ளிட்டோருடன் 2ம் கட்ட ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அதே போல துணை முதல்வர் ஓபிஎஸ்சும் கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் மாலை 6 மணிக்கு மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார். இப்படியாக அதிமுகவில் தற்போது பரபரப்பு நீடித்த வண்ணமே இருக்கிறது.