‘ரூ.1.37 கோடி பணம், 3 கிலோ நகை பறிமுதல்’: ஐடி ரெய்டில் சிக்கிய சுற்றுச்சூழல்துறை அதிகாரி!

‘ரூ.1.37 கோடி பணம், 3 கிலோ நகை பறிமுதல்’: ஐடி ரெய்டில் சிக்கிய சுற்றுச்சூழல்துறை அதிகாரி!

சென்னை பனகல் மாளிகையில் உள்ள சுற்றுச்சூழல் துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பாண்டியன். இவர் மீது புகார் எழுந்ததால், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இன்றும் சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் அவரது வீட்டில் 2ஆவது நாளாக சோதனை நடைபெறுகிறது.

‘ரூ.1.37 கோடி பணம், 3 கிலோ நகை பறிமுதல்’: ஐடி ரெய்டில் சிக்கிய சுற்றுச்சூழல்துறை அதிகாரி!

இந்த நிலையில், பாண்டியன் வீட்டில் இதுவரை ரூ.1.37 கோடி பணமும், 3 கிலோ தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரூ.1 1/2 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள், ரூ.5.40லட்சம் மதிப்புள்ள வைரம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ரூ.7 கோடி மதிப்புள்ள 18 சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவரது வீட்டில் இருந்து 1 கார், மூன்று இருசக்கர வாகனங்களுடன் நிரந்தர வைப்பு நிதியாக ரூ.37 லட்சம் இருந்ததும், அலுவலகத்திலிருந்து ரூ.88,500 பணம் இருந்ததும் சோதனையில் அம்பலமாகியுள்ளது.