அதிரடி காட்டிய பும்ரா… இந்தியாவுக்கு 209 ரன்கள் இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து

 

அதிரடி காட்டிய பும்ரா… இந்தியாவுக்கு 209 ரன்கள் இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.அதன்படி முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் நகரின் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் கடந்த புதன்கிழமை தொடங்கியது.

அதிரடி காட்டிய பும்ரா... இந்தியாவுக்கு 209 ரன்கள் இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 84.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 278 ரன்களை எடுத்தது.இதன் மூலம் 95 ரன்கள் பின்னடைவுடன் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி 11.1 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்திருந்த போது மழையிலினால் மூன்றாவது நாள் ஆட்டம் முன்கூட்டிய முடிக்கப்பட்டது.

இன்று 4வது நாள் ஆட்டம் தொடங்கிய உடன் ரோரி பர்ன்ஸ் 18 ரன்னிலும்,சிப்லி 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.இதன்பிறகு வந்த கேப்டன் ஜோ ரூட் ஒருநாள் போட்டியை போல அதிரடியாக ஆட தொடங்கினார். மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன.பேர்ஸ்டோ 30 ரன்களிலும்,லாரன்ஸ் 25 ரன்களிலும் மற்றும் பட்லர் 17 ரன்களிலும் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.ஆனால் கேப்டன் ஜோ ரூட் தொடர்ந்து அதிரடியாக ஆடி 154 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் சதம் அடித்து அசத்தினார்.ஒரு வழியாக ஜோ ரூட்டை 109 ரன்களில் ஆட்டமிழக்க செய்தார் பும்ரா.

அதிரடி காட்டிய பும்ரா... இந்தியாவுக்கு 209 ரன்கள் இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து

இறுதிகட்டத்தில் சாம் கரன் தன் பங்குக்கு 32 ரன்கள் சேர்த்தார்.85.5 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 303 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் அட்டகாசமாய் பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் இந்திய அணிக்கு 209 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரு மணி நேர ஆட்டமும் நாளை கடைசி நாள் ஆட்டமும் முழுவதும் உள்ளதால் இந்த ஆட்டத்தில் வெற்றி அல்லது தோல்வி என முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.