தமிழகத்திலுள்ள ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைக்க அரசாணை!

தமிழகத்திலுள்ள ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைக்க அரசாணை!

2018- 2019 ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி துறைக்கான மாணியக்கோரிக்கையின் படி தமிழகம் முழுவதும் ஊர் பெயர்களை தமிழில் உச்சரிப்பது போல ஆங்கிலத்திலும் உச்சரிக்கக் கூடிய வகையில் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டு அதனை அரசிதழில் வெளியிட்டுள்ளது. உதாரணமாக எழும்புரை ஆங்கிலத்தில் எக்மோர் எனக் குறிப்பிட்டு வந்த நிலையில் இனி எழும்பூர் என்றே மாற்றம் செய்யப்படுகிறது. திருவல்லிக்கேணி என்பதை ட்ரிப்ளிகேன் எனக் குறிப்பிடாமல் திருவல்லிக்கேணி என்றே அமைய அரசாணை வழி செய்கிறது. இதற்காக உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு, செலவினமாக ரூபாய் 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்திலுள்ள ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைக்க அரசாணை!

இந்த உயர்நிலைக்குழுவில் அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவரால் பரிந்துரைக்கப்படும் ஊர்ப் பெயர்கள், தமிழ் ஒலி வடிவங்களுக்கேற்ப ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டலுடன் கூடிய வரைவு தமிழ் வளர்ச்சி இயக்குநருக்கு அனுப்பி பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது