தோல்வியை நோக்கி பாகிஸ்தான்… சாதனை உற்சாகத்தில் இங்கிலாந்து வீரர்!

 

தோல்வியை நோக்கி பாகிஸ்தான்… சாதனை உற்சாகத்தில் இங்கிலாந்து வீரர்!

இங்கிலாந்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்துவருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் த்ரில் வெற்றியைச் சுவைத்தது இங்கிலாந்து.

பாகிஸ்தான் வீரர்களின் மெத்தனமான ஆட்டத்தை, மூத்த வீரர்கள் கடுமையாக விமர்சித்தார்கள். முதல் போட்டியின் வெற்றியால் இங்கிலாந்து 1: 0 எனும் கணக்கில் முன்னிலை வகித்தது.

தோல்வியை நோக்கி பாகிஸ்தான்… சாதனை உற்சாகத்தில் இங்கிலாந்து வீரர்!

இரண்டாம் டெஸ்ட் போட்டியில் அதிக நேரம் ஆடியது மழைதான். அத்தனை முறை மழை குறுக்கிட்டது. ஆனாலும், பாகிஸ்தானின் ஆட்டம் மெச்சும்படியாகவும் இல்லை.

ஐந்து நாள்களில் இரு அணிகளும் ஒரு இன்னிங்ஸ்கூட முடிக்க முடியவில்லை. அதனால், இரண்டாம் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. எனவே, இங்கிலாந்து 1: 0 எனும் நிலையே தொடர்ந்தது.

தோல்வியை நோக்கி பாகிஸ்தான்… சாதனை உற்சாகத்தில் இங்கிலாந்து வீரர்!

இந்நிலையில் மூன்றாம் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்றுவருகிறது. முதலில் பேட்டிங் பிடித்த இங்கிலாந்து சிறப்பாக ஆடியது. ஜாக் கிராவ்லி 393 பந்துகளில் 267 ரன்களைக் குவித்தார்.

விக்கெட் கீப்பரான ஜாஸ் பட்லர் 311பந்துகளில் 152 ரன்களை எடுத்தார். மற்ற வீரர்களும் ஓரளவு ஆடியதால் 8 விக்கெட் இழப்புக்கு 583 ரன்களைக் குவித்தது இங்கிலாந்து அணி.

அடுத்து பேட்டிங்கிள் களம் இறங்கியது பாகிஸ்தான் அணி. அந்த அணியின் கேப்டன் அஸார் அலியைத் தவிர வேறு எவருமே ஒழுங்கான ஆட்டத்தை வெளிப்படுத்தவே இல்லை.

தோல்வியை நோக்கி பாகிஸ்தான்… சாதனை உற்சாகத்தில் இங்கிலாந்து வீரர்!

அசார் அலி 273 பந்துகளில் 141 ரன்களைக் குவித்தார். ஆனால், மற்றவர்களில் ஆறு பேர் ஒற்றை இலக்க ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், அனைத்து விக்கெட்டுகளை இழந்து 273 மட்டுமே எடுத்தது.

இதனால், பாலோ ஆன் முறையில் மீண்டும் பேட்டிங் பிடிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டது பாகிஸ்தான் அணி. இந்த நிலையோடு மூன்றாம் நாள் ஆட்டம் முடிவடைந்தது.

பாகிஸ்தான் அணி தோல்வியைத் தவிர்க்க வேண்டும் எனில், 310 ரன்களைக் குவித்து, அதன்பின் வெற்றிக்கான ரன்களையும் எடுக்க வேண்டும். அந்த ரன்களை இங்கிலாந்து அணி எடுக்க விடாமல் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டும்.

இது நடக்க சாத்தியக்கூறுகள் மிக மிகக் குறைவு. அனேகமாக இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றியை சுவைக்கும் என்றே தெரிகிறது.

தோல்வியை நோக்கி பாகிஸ்தான்… சாதனை உற்சாகத்தில் இங்கிலாந்து வீரர்!

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் ஆண்டர்சன் மிகத் திறமையாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த ஐந்து விக்கெட்டுகளைச் சேர்த்து அவர் 598 விக்கெட்டுகளை டெஸ்ட் போட்டிகளில் எடுத்துள்ளார்.

 

இன்னும் 2 விக்கெட்டுகளை மட்டும் வீழ்த்தினால், உலகளவில் 600 விக்கெட்டுகள் வீழ்த்திய நான்காவது வீரர் எனும் பெருமையும் சாதனையும் ஆண்டர்சனைச் சேரும்.