கொரோனாவின் கோரதாண்டவம்… பல ஆயிரம் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் முன்னணி நிறுவனம்!

 

கொரோனாவின் கோரதாண்டவம்… பல ஆயிரம் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் முன்னணி நிறுவனம்!

கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பல உயிர்களை காவு வாங்கி வருகிறது. கண்ணுக்கு தெரிந்து பல கொடூரங்களை நிகழ்த்தி வரும் இந்தத் தொற்று கண்ணுக்கும் தெரியாமல் பல ஆபத்துகளையும் ஏற்படுத்திவிட்டது. அதாவது பல நாடுகளின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. ஊரடங்கால் ஏற்பட்ட நிதி நெருக்கடியைச் சமாளிக்க, பல நிறுவனங்கள் தங்களின் வேலையாட்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றனர். பலர் வாழ்வாதாரத்தை இழந்து எதிர்காலம் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தவித்து நிற்கின்றனர்.

கொரோனாவின் கோரதாண்டவம்… பல ஆயிரம் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் முன்னணி நிறுவனம்!

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் தங்களின் பைலட்டுகள் ஆயிரம் பேரை வேலையைவிட்டு நீக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. 4,300 விமானிகள் மற்றும் கிட்டத்தட்ட 22,000 கேபின் குழு பணியாளர்கள் நீக்கப்பட இருப்பதாகவும் தகவல் கிடைக்கின்றன. அந்நிறுவனம் தனது பணியாட்களில் மூன்றில் ஒரு பங்கு நபர்களை வேலை நீக்கம் செய்ய இருக்கிறது.கொரோனாவின் கோரதாண்டவம்… பல ஆயிரம் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் முன்னணி நிறுவனம்!

எந்தவித மேலதிக விபரங்களையும் வழங்காமல், வேலைநீக்கம் செய்ய இருப்பதாகவும் பணியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த கொரோனாவின் கோர தாண்டவம் எப்போது தணியும் என்று மக்கள் காத்திருக்கும் சூழல் தான் தற்போது!