வழக்கம்போல் காவல்துறை உதவிக்கு 100/112 எண்களை அழைக்கலாம்!

 

வழக்கம்போல் காவல்துறை உதவிக்கு 100/112 எண்களை அழைக்கலாம்!

பி.எஸ்.என்.எல் தொலை தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏர்டெல், வோடஃபோன், ஐடியா மற்றும் ஜியோ வாடிக்கையாளர்களின் கைப்பேசியிலிருந்து காவல் அவசர அழைப்பு எண் 100 மற்றும் 112 அழைப்புகளை காவல் கட்டுப்பாட்டறையில் பெறுவதில் இடர்பாடு ஏற்பட்டது. எனவே தற்காலிகமாக மாற்று எண்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.

வழக்கம்போல் காவல்துறை உதவிக்கு 100/112 எண்களை அழைக்கலாம்!

இந்நிலையில் தற்போது தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது என்றும் வழக்கம்போல் காவல்துறை உதவிக்கு 100/112 எண்களை அழைக்கலாம் என்றும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.