சிறுகனூர் மறுவாழ்வு முகாமில் யானைகள் உற்சாக மண் குளியல்

 

சிறுகனூர் மறுவாழ்வு முகாமில் யானைகள் உற்சாக மண் குளியல்

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் உள்ள யானைகள் மறுவாழ்வு முகாமில் யானைகள் உற்சாகமாக மண் குளியளில் ஈடுபடுவது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சிறுகனூர் மறுவாழ்வு முகாமில் யானைகள் உற்சாக மண் குளியல்

சிறுகனூரை அடுத்த எம்.ஆர்.பாளையம் கிராமத்தில் உள்ள காப்புக்காட்டில் 19.80 ஹெக்டேர் பரப்பளவில் யானைகள் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி மதுரையிலிருந்து மலாச்சி என்ற யானை கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த காஞ்சி காமகோடி

சிறுகனூர் மறுவாழ்வு முகாமில் யானைகள் உற்சாக மண் குளியல்

பீடத்துக்கு சொந்தமான சந்தியா, இந்து, ஜெயந்தி ஆகிய 3 பெண் யானைகள் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 27-ஆம் தேதி கொண்டு வரப்பட்டன. இந்நிலையில் புதிதாக வந்த யானைகள், அங்கு ஏற்கெனவே இருந்த மலாச்சி யானையுடன் நெருங்கி பழகுவதுடன், அதனுடன் சேர்ந்தே நடைபயிற்சிக்கும் செல்கின்றன. மேலும், ஷவரில் குளிப்பதுடன், உற்சாக மண் குளியல் போட்டு நடமாடுகின்றன. யானைகளை கவனித்து கொள்வதற்காக வனசரகர் தலைமையில் 15 பேர் கொண்ட குழு ஏற்படுத்தி கண்காணித்து வருவதாக

சிறுகனூர் மறுவாழ்வு முகாமில் யானைகள் உற்சாக மண் குளியல்

தெரிவித்துள்ள வனத்துறை அதிகாரிகள், வனத்துறையில் உள்ள பாகன்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த வனத்துறை ஊழியர்களைக் கொண்டு யானைகளை பராமரித்து வருவதாகவும் தெரிவித்தனர். மேலும், புதிதாக வரும் யானைகள் இரண்டு நாட்கள் சோகத்துடன் இருந்ததாக தெரிவித்த வனத்துறையினர், யானைகளுடன் யானைப்பாகன்கள் பழகியதால் அவை உற்சாகமாக நடனமாடியும், காலை மாலை என இருவேளையும் நடைபயிற்சி சென்று ஷவரில் குளித்து மண் குளியல் போடும் என்றும் தெரிவித்தனர்.