கோவை வனப்பகுதியில் தொடரும் யானை உயிரிழப்பு சம்பவம்!

 

கோவை வனப்பகுதியில் தொடரும் யானை உயிரிழப்பு சம்பவம்!

சிறுமுகை வனச்சரக பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வனப்பகுதியில் தொடரும் யானை உயிரிழப்பு சம்பவம்!

கோவை மாவட்டம் சிறுமுகை பெத்திகுட்டை பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்ய மருத்துவ குழுவுக்கு தகவல் அளித்துள்ளனர். பெத்திகுட்டை பகுதியில் உடல்நலக்குறைவால் பெண் யானை இறந்திருக்கலாம் என முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி, கோவையில் ஒரே மாதத்தில் மட்டும் 18 யானைகள் உயிரிழந்தன.

கோவை வனப்பகுதியில் தொடரும் யானை உயிரிழப்பு சம்பவம்!

சமீபத்தில் நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் கடந்த 4 ஆம் தேதி உணவு தேடி வந்த 40 வயது மதிக்கத்தக்க யானையை அங்கிருந்த ரிசார்ட் ஊழியர்கள் விரட்ட, டயரைகொளுத்தி அதன் மீது வீசியுள்ளனர். இதில் காயமடைந்த யானை வலியில் சுற்றித்திரிந்துள்ளது. இதையடுத்து யானையை மீட்டு சிகிச்சைக்கு லாரியில் முதுமலைக்கு அழைத்து செல்லும் வேளையில் கடந்த 19 ஆம் தேதி யானை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.