பொள்ளாச்சி அருகே வளர்ப்பு முகாமில் பெண் யானை உயிரிழப்பு!

 

பொள்ளாச்சி அருகே வளர்ப்பு முகாமில் பெண் யானை உயிரிழப்பு!

வளர்ப்பு முகாமில் இருந்த 41 வயதான பெண் யானை உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தது.

அண்மை காலமாக உணவுத் தேடி வனப்பகுதிகளில் இருக்கும் யானைகள், குடியிறுப்புப் பகுதிக்குள் சென்று மக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் யானைகளை ட்ரோன் கேமராக்கள் மூலம் வனத்துறையினர் கண்காணிக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் மேட்டுப்பாளையம் அருகே இருக்கும் வனப்பகுதியில் உடலில் பலத்த காயங்களுடன் யானை ஒன்று சுற்றித் திரிவதை கேமராக்கள் மூலம் அறிந்த அதிகாரிகள், 2 கும்கி யானையை வரவழைத்து அந்த யானையை பிடித்து சிகிச்சை அளித்தனர்.

பொள்ளாச்சி அருகே வளர்ப்பு முகாமில் பெண் யானை உயிரிழப்பு!

சிகிச்சைக்கு பிறகு அந்த யானையின் உடல்நலம் தேறிய நிலையில், அது பள்ளத்தில் வழுக்கி விழுந்து உயிரிழந்தது. இது போன்று யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. இந்த நிலையில் கோவை பொள்ளாச்சியை அடுத்த டாஸ்லிப் வனப்பகுதியில் உள்ள கோழிக்கமுத்தி முகாமில் வளர்க்கப்பட்டு வந்த பெண் யானை ஒன்று உயிரிழந்துள்ளது. 41 வயதான பெண் யானை கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவுடன் இருந்ததாகவும், இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்ததாகவும் முகாம் அதிகாரிகள் தெரிவித்துள்னர்.