கோபிசெட்டிபாளையம்: தொழிற்சங்க விரோத நடவடிக்கையை கண்டித்து மின்சார வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

 

கோபிசெட்டிபாளையம்: தொழிற்சங்க விரோத நடவடிக்கையை கண்டித்து மின்சார வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

கோபிசெட்டிபாளையம்:
கோபிசெட்டிபாளையம் தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை
பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு
நடவடிக்கைக்குழுவின் சார்பில் தமிழக அரசின் மின்வாரிய நிர்வாகத்தின்
தொழிலாளர் விரோத மற்றும் தொழிற்சங்க விரோத நடவடிக்கையை கண்டித்து
மின்சார வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தமிழ்நாடு மின்சார வாரிய
மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய
தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழுவின் சார்பில் தமிழக அரசின்
தொழிலாளர்கள் விரோத போக்கை கண்டித்து தமிழ்நாடு மின்வாரிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோபிசெட்டிபாளையம்: தொழிற்சங்க விரோத நடவடிக்கையை கண்டித்து மின்சார வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

ஆர்ப்பாட்டத்தின் போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் வாரியதலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரும் இணைமேலாண்மை இயக்குநரும் மின்வாரிய ஊழியர்கள் பொறியாளர்கள் அலுவலர்கள் மீது கொரோனா நோய் தொற்று காலத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலையும் அவ நம்பிக்கையும் ஏற்படுத்திவருவதாகவும் ஊரடங்கு காலத்தில் அரசின் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தி மின் ஊழியர்கள் தடையில்லாத மின்சாரம் வழங்குவதில் இரண்டாம் கட்ட போர் வீரர்களாக பணியாற்றியதை மின்வாரிய நிர்வாகமும் அரசும் கண்டுகொள்ளவில்லை என்றும் பதவி உயர்வு இடமாறுதல் என அனைத்திலும் வாரிய உத்தரவு அப்பட்டமாக மீறப்படுவதாகவும் பதவி உயர்வுக்கு ஆரம்ப கட்ட பதவியில் மூன்றாண்டுகள் என அறிவித்த உத்தரவு உள்முக தேர்வில் ஐந்தாண்டுகள் ஒரே இடத்தில் என்ற இன்னொரு உத்தரவு வழங்கியதை கண்டித்தும் தொழிற்சங்கங்களை மதித்து நடப்பதில்லை தொழிலாளர்கள் விரோத தொழிற்சங்க விரோத நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோபிசெட்டிபாளையம்: தொழிற்சங்க விரோத நடவடிக்கையை கண்டித்து மின்சார வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

ஆர்ப்பாட்டத்தின் போது முழக்கங்கள் எழுப்பியும் துண்டு பிரசுரங்களை விநியோகித்தும்
மின்வாரிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.