‘தேர்தல் அறிக்கை’- மக்களிடம் கருத்து கேட்கும் ‘மக்கள் நீதி மையம்’

 

‘தேர்தல் அறிக்கை’- மக்களிடம் கருத்து கேட்கும் ‘மக்கள் நீதி மையம்’

வரவிருக்கும் 2021 தேர்தலுக்கான வாக்குறுதிகளை தயார் செய்வதில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன. தேர்தல் அறிக்கையை தயார் செய்வதில் தி.மு.க. படு வேகமாக களம் இறங்கியுள்ளது.பா.ம.க.விலும் மிக ஜரூராக வேலைகள் நடக்கின்றன.கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டது வேலை வாய்ப்பு. எனவே அனைத்து கட்சிகளும் வேலை

‘தேர்தல் அறிக்கை’- மக்களிடம் கருத்து கேட்கும் ‘மக்கள் நீதி மையம்’

வாய்ப்பு விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்தல் அறிக்கையை தயார் செய்து வருகின்றனர்.தி.மு.க.வை பொறுத்தவரையில் 40 லட்சம் பேருக்கு வேலை தரப்போவதாக அறிவிக்க காத்திருக்கிறார்கள்.
இதே போல் கமலஹாசனின் மக்கள் நீதி மைய்யக் கட்சியும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க

‘தேர்தல் அறிக்கை’- மக்களிடம் கருத்து கேட்கும் ‘மக்கள் நீதி மையம்’

இருக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக பெண்களைக் கவரும் வகையிலான திட்டங்களும், விவசாய வளர்ச்சிக்கான திட்டங்களையும் தேர்தல் அறிக்கையில் சொல்லவிருக்கிறார்கள்
இதற்கிடையே தமிழகம் முழுவதும் பொது மக்களைச் சந்தித்து அவர்களிடம் கருத்துக் கேட்டு தேர்தல்,அறிக்கையை தயார் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதன்படி சில கேள்விகளை முன் வைத்து படிவம் ஒன்றைத் தயார் செய்துள்ளனர். அந்தப் படிவம் மூலம் மக்கள் கருத்தை கேட்டு அதன் அடிப்படியில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப் போவதாகச் சொல்கிறார்கள். இதற்காக தனிக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்கள், மற்றும் கிராமப்பகுதி மக்களிடம் கருத்துகள் கேட்கும் பணி உடனடியாக தொடங்கப்பட இருக்கிறது.