#Pudukkottai நிச்சயமில்லாத புதுக்கோட்டை தொகுதி ; திமுகவா? அதிமுகவா?

 

#Pudukkottai நிச்சயமில்லாத புதுக்கோட்டை தொகுதி ;  திமுகவா? அதிமுகவா?

தமிழகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கும் ஒன்று 2021 சட்டசபை தேர்தல். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அதிமுக மூன்றாவது முறையும் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதேபோல் கடந்த 10 ஆண்டுகளாக அரியணை ஏற முடியாமல் தவித்து வரும் திமுகவோ இந்த முறை எப்படியாவது முதல்வர் நாற்காலியை கைப்பற்றிவிட வேண்டும் என்றும் கடுமையாக உழைத்து வருகிறது.

#Pudukkottai நிச்சயமில்லாத புதுக்கோட்டை தொகுதி ;  திமுகவா? அதிமுகவா?

அதன்படி தமிழகத்தின் பிரதான கட்சிகளான இந்த இரு பெரும் கட்சிகளும் தங்களது கூட்டணி பங்கீடு, வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை என அடுத்தடுத்த வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந்த சூழலில் மக்களின் தற்போதைய மனநிலை என்ன என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகளுடன் நமது டாப் தமிழ் நியூஸ் யூடியூப் சேனல் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக கருத்துக் கணிப்பு நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த செய்தியில் நாம் பார்க்கப்போகும் தொகுதி புதுக்கோட்டை. புதுக்கோட்டை மக்களின் பொன்னான வாக்குகள் யாருக்கு என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…

கடந்த தேர்தல்களில் புதுக்கோட்டை…

#Pudukkottai நிச்சயமில்லாத புதுக்கோட்டை தொகுதி ;  திமுகவா? அதிமுகவா?

புதுக்கோட்டையில் 1991ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சுவாமிநாதன் 82,605 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 1996 ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்ட பெரியண்ணன் புதுக்கோட்டை தொகுதியில் வெற்றி வாகை சூடினார். அப்போது அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 79 ஆயிரத்து 205. 2001ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட சி .விஜயபாஸ்கர் 77 ஆயிரத்து 627 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2006 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட நெடுஞ்செழியன் 64 ஆயிரத்து 319 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றி பெற்றார்.2011 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்துக்குமரன் புதுக்கோட்டை தொகுதியில் வெற்றி வாகை சூடினார். அப்போது அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 65 ஆயிரத்து 283. 2016ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்ட பெரியண்ணன் அரசு 66 ஆயிரத்து 739 வாக்குகள் பெற்றார். கடந்த 30 ஆண்டுகளில் புதுக்கோட்டை தொகுதியில் அதிமுக இரண்டு முறையும், திமுக இரண்டு முறையும் வெற்றிவாகை சூடியுள்ளது. அதேபோல் காங்கிரஸ் ஒரு முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

2021 சட்டமன்ற தேர்தல் : திமுக vs அதிமுக

#Pudukkottai நிச்சயமில்லாத புதுக்கோட்டை தொகுதி ;  திமுகவா? அதிமுகவா?

புதுக்கோட்டையில் இந்த முறை திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளவர் வி.முத்துராஜா. அதேபோல் இந்த முறையும் புதுக்கோட்டை தொகுதியை தன்வசம் வைத்துக்கொண்ட அதிமுக, வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான் என்பவரை களமிறங்கியுள்ளது.

ஆளப்போவது யார்? டாப் தமிழ் நியூஸ் களநிலவரம்!

#Pudukkottai நிச்சயமில்லாத புதுக்கோட்டை தொகுதி ;  திமுகவா? அதிமுகவா?

புதுக்கோட்டை தொகுதியில் நமது டாப் தமிழ் நியூஸ் கள நிலவரப்படி எந்த தொகுதிக்கு சாதகமானதாக உள்ளது என்று பார்த்தோமேயானால் திமுக , அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் அங்கு பலமான மக்கள் ஆதரவு உண்டு. ஆனால் அதிமுகவை காட்டிலும் இந்த முறை திமுகவுக்கு புதுக்கோட்டை மக்கள் ஆதரவு அதிக அளவில் அளித்து இருப்பது நமது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அதிமுக – திமுக ஆகிய இரண்டு கட்சிகளைத் தவிர்த்து மூன்றாவது அணியாக கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தை பலரும் தேர்வு செய்துள்ளனர். புதுக்கோட்டை தொகுதி மக்களின் முக்கிய பிரச்னையாக கூறப்படுவது சாலை, குடிநீர் , பிரச்னை மற்றும் பாதாள சாக்கடை பிரச்னையாகும்.

புதுக்கோட்டையில் திமுக வி.முத்துராஜா வெற்றிபெறுவாரா? அல்லது அதிமுக வேட்பாளர் வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான் வெற்றிவாகை சூடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்…!