கேளராவில் ஆளும் இடதுசாரி கூட்டணி முன்னிலை!

 

கேளராவில் ஆளும் இடதுசாரி கூட்டணி முன்னிலை!

கேரளா

கேரள சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் ஆளும் இடதுசாரி கட்சி 80 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

கேரள மாநிலத்தில் உள்ள 140 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஆளும்கட்சியான இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவியது.

கேளராவில் ஆளும் இடதுசாரி கூட்டணி முன்னிலை!

இந்த நிலையில், கேரளாவில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விருவிருப்புடன் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 80 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 54 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. பாஜக 1 இடத்தில் முன்னிலை வகித்து வருகிறது. கேரளாவில் ஆட்சியமைக்க 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.