எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி முன்னிலை!

 

எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி முன்னிலை!

தமிழ்நாடு 234 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட தமிழகத்தில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. அதேபோல் புதுச்சேரி 30 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் பெரும்பான்மைக்கு தேவை 17 இடங்கள். அஸ்ஸாம் 126 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட அஸ்ஸாமில் பெரும்பான்மைக்கு தேவை 64 இடங்கள் தேவைப்படுகிறது. கேரளா 140 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட கேரளாவில் பெரும்பான்மைக்கு தேவை 71 இடங்கள் ஆகும். மேற்கு வங்காளம் 294 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் பெரும்பான்மைக்கு தேவை 148 இடங்கள் தேவைப்படுகிறது.

எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி முன்னிலை!

இந்நிலையில் தமிழகத்தில் தபால் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 31, அதிமுக கூட்டணி 23 தொகுதிகளிலும், அமமுக 1 இடத்தில் முன்னிலை வகிக்கின்றனர்.


எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை

திருவண்ணாமலை தொகுதியில் தபால் ஓட்டு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு முன்னிலை

விருகம்பாக்கம் தொகுதியில் தபால் ஓட்டு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா முன்னிலை

மதுரை மேற்கு தொகுதி அமைச்சர் செல்லூர் ராஜு பின்னடைவு

எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி முன்னிலை!

தாராபுரத்தில் பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலை – எல் முருகன் 1343 வாக்குகளும், திமுக வேட்பாளர் கயல்விழி 864 வாக்குகள் பெற்றுள்ளனர்.

திருவள்ளூரில் திமுக வேட்பாளர் ராஜேந்திரன் 3,459 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

சைதாப்பேட்டை தொகுதியில் தபால் ஓட்டு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் முன்னிலை

தூத்துக்குடி தொகுதியில் தபால் ஓட்டு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் முன்னிலை

பாளையங்கோட்டை தொகுதியில் தபால் ஓட்டு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் அப்துல் வஹாப் முன்னிலை

திருச்சி மேற்கு தொகுதியில் தபால் ஓட்டு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கே.என். நேரு முன்னிலை