பா.ஜ.க.வில் நான் அதிகம் அவதிப்பட்டேன்.. நாளை தேசியவாத காங்கிரசில் சேரப்போகிறேன்… ஏக்நாத் கட்சே

 

பா.ஜ.க.வில் நான் அதிகம் அவதிப்பட்டேன்.. நாளை தேசியவாத காங்கிரசில் சேரப்போகிறேன்… ஏக்நாத் கட்சே

மகாராஷ்டிரா பா.ஜ.க.வில் பிரபலமான தலைவரான விளங்கிய ஏக்நாத் கட்சே அந்த கட்சியிலிருந்து நேற்று வெளியேறினார். நாளை தேசியவாத காங்கிரசில் சேர உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான விளங்கியவரும், முன்னாள் மாநில அமைச்சருமான ஏக்நாத் கட்சே, அண்மை காலமாக அவர் பா.ஜ.க.விலிருந்து வெளியேற போவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. ஆனால் பா.ஜ.க. அதனை மறுத்து வந்தது. அதேசமயம் ஏக்நாத் காட்ஸை இது குறித்து மவுனம் சாதித்து வந்தார். இந்த சூழ்நிலையில் நேற்று திடீரென பா.ஜ.க.விலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். மேலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக கூறி பா.ஜ.க. தலைமைக்கு தனது ராஜினாமா கடிதத்தையும் அளித்தார்.

பா.ஜ.க.வில் நான் அதிகம் அவதிப்பட்டேன்.. நாளை தேசியவாத காங்கிரசில் சேரப்போகிறேன்… ஏக்நாத் கட்சே
தேவேந்திர பட்னாவிஸ்

இது தொடர்பாக ஏக்நாத் கட்சே கூறியதாவது: அப்போதைய முதல்வர் (தேவேந்திர பட்னாவிஸ்) ஒரு பெண்ணின் தவறான துன்புறுத்தல் குற்றச்சாட்டின் பேரில் என் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யுமாறு போலீசாருக்கு அறிவுறுத்தினார். அந்த வழக்கு பின்னர் வாபஸ் பெறப்பட்டது. எனக்கு எதிராக ஊழல் விசாரணை தொடங்கப்பட்டது. அதில் நான் சுத்தகமாக வந்தேன்.

பா.ஜ.க.வில் நான் அதிகம் அவதிப்பட்டேன்.. நாளை தேசியவாத காங்கிரசில் சேரப்போகிறேன்… ஏக்நாத் கட்சே
சந்திராகாந்த் பாட்டீல்

பா.ஜ.க.வில் நான் நிறைய அவதிப்பட்டேன். கட்சி எனக்கு முக்கியமான பதவிகளை கொடுத்தது, ஆனால் அதற்கு பதிலாக நான் கட்சிக்காகவும் பணியாற்றினேன், பெரிய தியாகங்களை செய்தேன். அக்டோபர் 23ம் தேதி (நாளை) தேசியவாத காங்கிரசில் சேரப்போகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். மகாராஷ்டிரா பா.ஜ.க. தலைவர் சந்திராகாந்த் பாட்டீல் இது குறித்து கூறுகையில், காலையில் ஏக்நாத் கட்சே ராஜினாமா கடிதம் கிடைத்தது, அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. புதிய கட்சியில் சேருவதற்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவித்தார்.