மு.க.ஸ்டாலின், அதிமுக அமைச்சர்கள் பிரச்சாரத்துக்கு எண்டு கார்டு?

 

மு.க.ஸ்டாலின், அதிமுக அமைச்சர்கள் பிரச்சாரத்துக்கு எண்டு கார்டு?

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் தமிழகமே எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் ‘அந்த நாள்’ வரப்போகிறது. ஆட்சியை கைப்பற்ற துடித்துக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் அதிரடியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றன. தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்து, வேட்பு மனு பரிசீலனையும் தொடங்கிவிட்டது.

மு.க.ஸ்டாலின், அதிமுக அமைச்சர்கள் பிரச்சாரத்துக்கு எண்டு கார்டு?

மாபெரும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தங்களது வேட்பாளர்களை ஆதரித்து அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. முதல்வர் வேட்பாளர்களான மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன், சீமான் உள்ளிட்டோர் அதிரடியாக களமிறங்கியுள்ளனர். இந்த நிலையில், அரசு பதவி வகிக்கும் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின், அதிமுக அமைச்சர்கள் பிரச்சாரத்துக்கு எண்டு கார்டு?

அரசு சம்பளம் பெறுவதால் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கக்கூடாது என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய இந்த மனுவை பரிசீலிக்க கோரும் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரிக்கப்பட உள்ளது. கொரோனா காலகட்டத்தில் மக்கள் கூட்டத்துடன் பிரச்சாரங்கள் அரங்கேறி வருவது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் சூழலில், மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக அமைச்சர்களின் பிரச்சாரத்துக்கு எண்டு கார்டு போடப்படுமா? என்பது விரைவில் தெரிய வந்துவிடும்.