ரூ.304 கோடி லாபம் அள்ளிய ராயல் என்பீல்டு தயாரிக்கும் எய்ஷர் மோட்டார்ஸ்….

 

ரூ.304 கோடி லாபம் அள்ளிய ராயல் என்பீல்டு தயாரிக்கும் எய்ஷர் மோட்டார்ஸ்….

பிரபல ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் மற்றும் இதர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான எய்ஷர் மோட்டார்ஸ் கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 மார்ச் காலாண்டில் எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.304.3 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 44.1 சதவீதம் குறைவாகும்.

ரூ.304 கோடி லாபம் அள்ளிய ராயல் என்பீல்டு தயாரிக்கும் எய்ஷர் மோட்டார்ஸ்….

2019 மார்ச் காலாண்டில் எய்ஷர் மோட்டார்ஸ் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.544.80 கோடி ஈட்டியிருந்தது. கடந்த மார்ச் மாதத்தின் இரண்டாவது பாதியில் நாடு தழுவிய லாக்டவுன் மற்றும் ஒட்டு மொத்தத்தில் வாகன வர்த்தகத்தில் மந்தநிலை போன்ற காரணங்களால் 2020 மார்ச் காலாண்டில் எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் லாபம் குறைந்துள்ளதாக தகவல். மேலும் அதே காலாண்டில் அந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாய் 11.7 சதவீதம் சரிந்து ரூ.2,208.2 கோடியாக குறைந்துள்ளது.

ரூ.304 கோடி லாபம் அள்ளிய ராயல் என்பீல்டு தயாரிக்கும் எய்ஷர் மோட்டார்ஸ்….

எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாத காலத்தில் மொத்தம் 1.63 லட்சம் ராயல் என்பீல்டுகளை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிட்டால் 17 சதவீதம் குறைவாகும். வால்வோ எய்ஷர் கமர்ஷியல் வெஹிகிள் மொத்தம் 11,629 டிரக்குகள் மற்றும் பஸ்களை விற்பனை செய்துள்ளது. 2019 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் 21,010 டிரக்குகள் மற்றும் பஸ்களை விற்பனை செய்து இருந்தது.