’’ தமிழகத்தின் அடிப்படை என்பதே காவி தான்’’- சிவகிரியில் அண்ணாமலை

’’ தமிழகத்தின் அடிப்படை என்பதே காவி தான்’’- சிவகிரியில் அண்ணாமலை

ஈரோடு மாவட்டத்தில் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை வந்தார். சிவகிரியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

’’ தமிழகத்தின் அடிப்படை என்பதே காவி தான்’’- சிவகிரியில் அண்ணாமலை

பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ‘’கொங்கு மண்டலத்தில் ஈரோடு, திருப்பூர், கோவை ஒருங்கிணைந்த பூத் கமிட்டி அமைத்து ஒரு கமிட்டிக்கு 35 பேர் வீதம் அமைத்து பிரதமர் மோடியின் சாதனைகளை விளக்கி கூறவேண்டும். மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் 17 ஆயிரம் விவசாயிகள் பிரதமரின் வேளாண் நிதி உதவி பெறும் திட்டத்தில் பயன் பெற்று வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் பாரதிய ஜனதா வரும் சட்டமன்ற தொகுதியில் இரண்டு இடங்களில் போட்டியிடும். அதில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுவது உறுதி.

’’ தமிழகத்தின் அடிப்படை என்பதே காவி தான்’’- சிவகிரியில் அண்ணாமலை

மத்திய அரசின் வேளாண் மசோதா என்பது மிக சிறப்பாக உள்ளது. 2024ம் ஆண்டுக்குள் விவசாயிகளுக்கு வேளாண் விலை பொருட்களுக்கு இரட்டிப்பு விலை கிடைக்கும்.

அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி என்பது திருமண பந்தம் போல இருக்கிறது. பெரியார் சிலைகள் மீது காவி சாயம் பூசியதற்கும் பா.ஜ.க.வுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. சில விஷ கிருமிகள் தான் இது போன்ற சம்பங்களில் ஈடுபடுகின்றனர்.

’’ தமிழகத்தின் அடிப்படை என்பதே காவி தான்’’- சிவகிரியில் அண்ணாமலை

வேளாண் சட்டத்தை பற்றி எதிர் கட்சிகள் விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
தமிழகத்தின் அடிப்படை என்பதே காவி தான். வருகிற தேர்தலில் தமிழகத்தில் அதிக ஒட்டு விழுக்காடு கொண்ட கட்சியாக பா.ஜ.க மாறும்’’என்று கூறினார்.

’’ தமிழகத்தின் அடிப்படை என்பதே காவி தான்’’- சிவகிரியில் அண்ணாமலை