படித்த இளம் பெண்களை…சிபிஎம் மீது பாஜக முன்வைக்கும் குற்றச்சாட்டு

 

படித்த இளம் பெண்களை…சிபிஎம் மீது பாஜக முன்வைக்கும் குற்றச்சாட்டு

இளைஞர்களை மதவாத மற்றும் தீவிரவாத கொள்கைகளில் புகுத்த நம் மாநிலத்தில் திட்டமிட்ட முயற்சிகள் நடைபெறுகின்றன. குறிப்பாக படித்த இளம் பெண்களை இந்த தீவிரவாத சிந்தனைகளில் ஈடுபடுத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன என்கிறார் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.

படித்த இளம் பெண்களை…சிபிஎம் மீது பாஜக முன்வைக்கும் குற்றச்சாட்டு

அவர் மேலும், நம் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகள் இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். பயங்கரவாத அமைப்பான தாலிபானை ஆதரித்து பல்வேறு விவாதங்கள் நம் மாநிலத்தில் நடைபெறுகின்றன. பொதுவாக மதவாத சிந்தனை இல்லாத கிருஸ்துவ மதத்தின் சிலரிடையே இஸ்லாமியர்களுக்கு எதிரான தீவிரவாத சிந்தனை தலைதூக்குகிறது எனபதை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்கிறார்.

இப்படி ஒரு சுற்றறிக்கையை கேரளாவில் தங்களின் கட்சி மற்றும் அமைப்புகளுக்கிடையே உலவ விட்டிருக்கிறது ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM). தாங்கள் ஆளும் மாநிலத்தில் இஸ்லாமிய மற்றும் கிருஸ்துவ மத அடிப்படைவாதம் பெருகுகிறது என்ற பிரச்சாரத்தை மேற்கொள்கிறது கம்யூனிஸ்ட் கட்சி.

இந்த நிலைப்பாடு இந்தியா முழுவதற்கும் பொருந்துமா என்பதை அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும். அப்படி இல்லையெனில், கேரளாவில் மட்டுமே இந்த நிலைப்பாடு என்றால், அங்கு நடைபெறும் ஆட்சியால் தான் மத அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதம் உருவாகிறது எனபதையும், அதை கட்டுப்படுத்த தங்கள் ஆட்சியால் இயலவில்லை என்பதையும் ஏற்றுக்கொண்டு கம்யூனிஸ்டுகள் ஆட்சியை விட்டு அகல வேண்டும் என்று வலியுத்துகிறார்.