வன்னியர் இடஒதுக்கீட்டால் குறிவைக்கப்படும் அமைச்சர்கள்!!

 

வன்னியர் இடஒதுக்கீட்டால் குறிவைக்கப்படும் அமைச்சர்கள்!!

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டுமென்பது அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாமகவின் 40 ஆண்டுகால கோரிக்கை. இதனை முதல்வர் பழனிசாமி நிறைவேற்றி வைத்தார். வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என சட்டமன்றத்திலேயே அறிவித்தார். இச்சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் ஒப்புதல் அளித்து விட்டார்.

வன்னியர் இடஒதுக்கீட்டால் குறிவைக்கப்படும் அமைச்சர்கள்!!

அவசர அவசரமாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்ததற்கு காரணம் சட்டமன்றத் தேர்தலில் பாமகவுடன் கூட்டணி அமைப்பதற்காக தான். அந்த நோக்கமும் நிறைவேறி, பாமகவுக்கு அதிமுக கூட்டணியில் 23 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வன்னியர் இடஒதுக்கீட்டால் குறிவைக்கப்படும் அமைச்சர்கள்!!

வன்னியர் இட ஒதுக்கீட்டால் பாமக மகிழ்ச்சியில் உள்ள நிலையில் மற்ற சமூகத்தினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக அதிமுக மீது தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த மறவர்கள், பிறமலைக்கள்ளர் உள்ளிட்ட சமூகத்தினர் கடுப்பில் உள்ளதோடு வாக்கு சேகரிக்க சென்றால் கருப்புக்கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பையும் பதிவு செய்து வருகின்றனர். அத்துடன் தேவர் சமூகத்தை சேர்ந்த அமைச்சர்கள் ஓபிஎஸ், ஆர் .பி .உதயகுமார் ,திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு,விஜயபாஸ்கர் ஆகியோர் மீது கடுமையான கோபத்தில் உள்ளனர். இதன் எதிரொலி தேர்தலில் தெரியவரும் என்று மறைமுகமாக கூறுகிறார்கள்.

வன்னியர் இடஒதுக்கீட்டால் குறிவைக்கப்படும் அமைச்சர்கள்!!

சாதி வாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளாமல் வன்னியர்களுக்கு மற்றும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு நிலவி வரும் நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளர் கே .பாலு, “வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு அளித்துள்ளது வன்னியர் சமுதாயத்தினர் மத்தியில் மகிழ்ச்சியும், எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து இடங்களிலும் எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும். அதற்காக நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். மீண்டும் எடப்பாடி தலைமையில் ஆட்சி அமையும்”என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்