“தடுப்பூசி முக்கியமானது; 18 வயதுக்கு மேற்பட்டோர் செலுத்திக்கொள்ள வேண்டுகிறேன்” – முதலமைச்சர் எடப்பாடி வேண்டுகோள்!

 

“தடுப்பூசி முக்கியமானது; 18 வயதுக்கு மேற்பட்டோர் செலுத்திக்கொள்ள வேண்டுகிறேன்” – முதலமைச்சர் எடப்பாடி வேண்டுகோள்!

இந்தியாவே கொரோனாவுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்து செல்கிறது. உயிரிழப்புகள் 3 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. கொரோனாவை எதிர்கொள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் என மருத்துவ நிபுணர்கள் திட்டவட்டமாகக் கூறுகின்றனர். இதனால் தடுப்பூசியின் தேவையை உணர்ந்து பல்வேறு மாநிலங்களும் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்த முன்வந்துள்ளன.

“தடுப்பூசி முக்கியமானது; 18 வயதுக்கு மேற்பட்டோர் செலுத்திக்கொள்ள வேண்டுகிறேன்” – முதலமைச்சர் எடப்பாடி வேண்டுகோள்!

அதன்படி தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. மே 1ஆம் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்குமே தடுப்பூசி போடப்படவுள்ளது. அதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியிருக்கிறது. COWIN என்ற இணையதளம் மூலமாகவும் ஆரோக்ய சேது செயலி வாயிலாகவும் முன்பதிவு செய்துகொள்ளலாம். இச்சூழலில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளின் பங்கு முக்கியமானது. இதனைக் கருத்தில் கொண்டு 1.5 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்து 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.