பன்வாரிலால் புரோஹித்துடன் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு!!

 

பன்வாரிலால் புரோஹித்துடன் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு!!

பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித்தை மரியாதை நிமித்தமாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.

பன்வாரிலால் புரோஹித்துடன் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு!!

தமிழ்நாட்டின் ஆளுநரான பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 18-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, புதிய ஆளுநருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.இதனிடையே நேற்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பன்வாரிலால் புரோகித்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர்.

பன்வாரிலால் புரோஹித்துடன் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு!!

இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பன்வாரிலால் புரோஹித்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அவருடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் கே.பி. முனுசாமி, வேலுமணி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் ராஜ்பவன் வந்து ஆளுநருரை சந்தித்தனர். பின்னர் பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சண்டிகர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் புறப்பட்டார்.