தமிழகத்தில் 80% மக்கள் மருந்தே இல்லாமல் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்- முதல்வர் பழனிசாமி

 

தமிழகத்தில் 80% மக்கள் மருந்தே இல்லாமல் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்- முதல்வர் பழனிசாமி

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “தமிழகத்தில் 7000,8000 என இருந்த கொரோனா பாதிப்பு அரசின் நடவடிக்கையால் 5,500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்றாலும் கொரோனா இறப்பு குறைக்கப்பட்டுள்ளது. 100, 110 என்று இருந்த உயிரிழப்பு எண்ணிக்கையும் பாதியளவுக்கு குறைந்துவிட்டது. நேரடியாக கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. மக்கள் ஒத்துழைப்பு அளித்தால்தான் கொரோனா கட்டுக்குள்வந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். மருத்துவர்கள்,செவிலியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்

தமிழகத்தில் 88% மக்கள் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்திருக்கின்றனர். வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தியதால் கொரோனா பரவல் தடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 80% மக்கள் மருந்தே இல்லாமல் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஒரு ராசியான மாவட்டம். நான் முதன்முதலாக குடிமராமத்து திட்டத்தை இந்த மாவட்டத்தில் தான் தொடங்கிவைத்தேன்.

தமிழகத்தில் 80% மக்கள் மருந்தே இல்லாமல் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்- முதல்வர் பழனிசாமி

காஞ்சிபுரத்தில் சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ளன. மக்கள் அதிகம் வந்து செல்லும் மாவட்டங்களாக இருப்பதால் காஞ்சிபுரம்,செங்கல்பட்டில் நோய் பரவல் அதிகம். வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் அதிகம் வருகின்றனர். இங்குள்ள மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள் உள்ளன. காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்களுக்கு பரிசோதனை. அறிகுறி உள்ளவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அரசியல் ஆதாயத்திற்காக சிலர் வேண்டுமென்றே குற்றம்சாட்டுகின்றனர்” எனக் கூறினார்.