அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு- கூட்டணி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை

 

அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு- கூட்டணி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை

சட்டமன்றத் தேர்தலில் ஆளும் அரசான அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறது. அதிமுக – பாஜக கூட்டணியை உறுதிப்படுத்தி விதமாக பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷாவை சந்திக்க முதல்வர் பழனிசாமி டெல்லி சென்றிருந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வருடன் தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் சென்றுள்ளனர்.

அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு- கூட்டணி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை

இந்நிலையில் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பேசுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம் குறித்தும் இருவரும் ஆலோசிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியை நாளை காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் பழனிசாமி சந்திக்கிறார். சந்திப்பின்போது காவிரி – குண்டாறு நதிநீர் இணைப்பு திட்டம், ஜி எஸ் டி நிலுவைத் தொகை, புயல் நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரி பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.