முதல்வரின் வாகனம் மீது தாக்குதல்!

 

முதல்வரின் வாகனம் மீது தாக்குதல்!

திருச்சி வரகனேரியில் தேர்தல் பரப்புரைக்காக சென்ற முதலமைச்சரின் மாற்று வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு குறைவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியானது. ஆனால், முன்கூட்டியே தேர்தலை நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இருப்பினும் முன்னணி கட்சிகள் அனைத்தும் தேர்தல் பரப்புரையில் களமிறங்கிவிட்டன. அதிமுகவை நிராகரிப்போம் என திமுக சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதே வேளையில், முதல்வர் பழனிசாமியும் தேர்தல் பணியில் களமிறங்கிவிட்டார். ஒவ்வொரு மாவட்டமாக சென்று அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் அவர், அதிமுக ஆட்சியை தக்க வைக்கும் என உறுதிப்பட தெரிவித்திருக்கிறார்.

முதல்வரின் வாகனம் மீது தாக்குதல்!

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது வரகனேரி பகுதியில் தேர்தல் பரப்புரைக்காக ஒரு சிறிய மேடை போடப்பட்டு இருந்தது. அதற்கு முன்னதாக முத்தரையர் சங்க தலைவர் விஸ்வநாதன் வீட்டிற்கு முன் முதல்வரை வரவேற்பு செய்ய சிலர் காத்திருந்தனர். ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் அதை தாண்டி முதல்வர் சென்றதால் அவருக்காக அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த அவரின் மாற்று வாகனத்தை அடித்து விஸ்வநாதன் ஆதரவாளர்கள் சேதப்படுத்தினர். முதல்வரின் வாகனத்தை சேதப்படுத்தியது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.