ரமலான் பண்டிகைக்கு முதல்வர் பழனிசாமி, டிடிவி தினகரன் வாழ்த்து!

 

ரமலான் பண்டிகைக்கு முதல்வர் பழனிசாமி, டிடிவி தினகரன் வாழ்த்து!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டுள்ளன. ஆனால் இம்மாதம் ரம்ஜான் பெருநாள் வருவதால் அன்று தொழுகையை எவ்வாறு நடத்துவது என்று இஸ்லாமிய மக்கள் குழப்பத்தில் உள்ளனர். சிறப்புத் தொழுகையை வீடுகளிலேயே செய்வது போல ரம்ஜான் பண்டிகையையும் வீட்டிலேயே தொழுகையை நடத்தலாம் என்றும் இந்த நன்னாளில் வாழ்த்துக் கூறவேண்டி யாரையும் சந்திக்க வேண்டாம் என்றும் தலைமை காஜி அறிவுறுத்தியுள்ளார்.

ரமலான் பண்டிகைக்கு முதல்வர் பழனிசாமி, டிடிவி தினகரன் வாழ்த்து!

தமிழகத்தில் நேற்று பிறை தென்படாததால் ரமலான் திங்கட்கிழமை கொண்டாடப்படும் என அரசு தலைமைக் காஜி அறிவித்துள்ளது. நாளை இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகையை கொண்டாட உள்ளனர். அதனால் இஸ்லாமியர்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ரமலான் பண்டிகைக்கு முதல்வர் பழனிசாமி, டிடிவி தினகரன் வாழ்த்து!

அதில், ‘ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புனிதப் பெருநாளில் உலகில் அமைதி நிலவட்டும்; அன்பு தழைக்கட்டும்; மகிழ்ச்சி பெருகட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ரமலான் பண்டிகைக்கு முதல்வர் பழனிசாமி, டிடிவி தினகரன் வாழ்த்து!

அதே போல அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “பெருநாள் என்ற மகிழ்வோடு ஈகைத்திருநாளான ரமலானைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இறைதூதர் நபிகள் நாயகம் போதித்த மனித நேயம், ஈகை, கோபம் தவிர்த்தல் உள்ளிட்ட உயர்பண்புகளின் வழியாக தலைசிறந்த மனித சமுதாயத்தை உருவாக்கிட புனித ரமலானில் அனைவரும் உறுதியேற்போம்” என்று வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.