இந்த உணவுகள் சாப்பிடுங்க கேன்சர் வராது…!

 

இந்த உணவுகள் சாப்பிடுங்க கேன்சர் வராது…!

முன்பெல்லாம் பார்த்தீர்கள் என்றால்  புற்றுநோய் என்பது ஏதோ ஒரு மூலையில் அரிதிலும் அரிதாக சிலருக்கு வரும்.அவருக்கு புற்றுநோய் இருக்கிறதாம்  என்று சொல்லும் போதே நெஞ்சம் பதைபதைக்கும் வகையில் ஒரு மிகப்பெரிய, கொடிய நோயாக புற்றுநோய் பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் இன்றைய சூழலில் சின்ன குழந்தைகளுக்கும் புற்று நோய் வருகிறது. நடுத்தர வயதினருக்கும் புற்று நோய் வருகிறது. நன்றாக நம்முடன் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர் திடீரென சாதாரண மருத்துவ பரிசோதனையை மேற் கொள்ளும்போது அவரது பரிசோதனையின் முடிவில் அவருக்கு புற்று நோய் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிய வருகிறது.

இந்த உணவுகள் சாப்பிடுங்க கேன்சர் வராது…!

சிலர் நல்ல ஒழுக்க நிலையில்தான் இருப்பார்கள். மது பழக்கம் இருக்காது புகை பிடிக்க மாட்டார்கள் ஆனால் அவர்களுக்கும் புற்றுநோய் தாக்கம் ஏற்படும். சிலர் பார்த்தீர்கள் என்றால் பாரம்பரியமாகவே அவர்களுக்கு எந்த நோயும் வந்திருக்காது. அவரது குடும்பம் வம்சாவளியாக நல்ல ஆரோக்கியமான குடும்பமாக இருந்து அவர்களின் முன்னோர் 80, 90 வயது வரை வாழ்ந்திருப்பார்கள்.  ஆனால் அவர்களுக்கும்  கூட புற்றுநோய் தாக்கம் ஏற்படும். அந்த அளவிற்கு இன்றைய வாழ்க்கை முறை மாற்றங்களில், வேகமான வாழ்வியலில் உணவு மாறுபாட்டால், மாசுக்களால் இந்தப் புற்றுநோய் வீரியம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.

இதுபோன்று புற்றுநோய் வரும் போது அதன் சிகிச்சை முறையும் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆரம்ப நிலையை நாம் கவனித்து விட்டோம் என்றால் அறுவை சிகிச்சை மூலமாகவோ, கீமோ மூலமாகவோ நாம் அதை குணப்படுத்த முடியும். சிலருக்கு புற்றுநோயை கண்டுபிடிக்கும் போது அது வேகமாக வளர்ந்து மூன்றாம் நிலையை எட்டிவிடும். அப்படி தெரிய வரும்போது அவர்களுக்கு முழுமையான குணம் என்பது மிகவும் கஷ்டமான ஒன்றாக மாறிவிடுகிறது.

இந்த உணவுகள் சாப்பிடுங்க கேன்சர் வராது…!

இது போன்றவர்களுக்கு வாழ்நாளை நீட்டிக்கவும்,  ஆரோக்கியமாக இருக்கவும், மிகவும் உதவக் கூடிய ஒன்று என்றால் அது உணவு. அத்துடன் சரியான சிகிச்சை முறையும் புற்று நோயை கட்டுப்படுத்தக் கூடிய ஒன்றாக இருக்கும்.இவை இரண்டும் அவர்கள் வாழ்நாளை நீடிப்பதற்கான வழிவகுக்கும். புற்று நோய் வரக்கூடிய சாதாரண காரணிகள் என்ன என்பதை அறிந்து அதை நாம் அறவே தவிர்த்துவிட வேண்டும். அதில் ஒன்று புகை பிடித்தல், புகையிலை . புகை பழக்கம் என்பது பெரும்பாலான புற்று நோய்களுக்கு முதல் காரணியாக உள்ளது. அதிக அளவு கெமிக்கல் கலந்த உணவுகளை நாம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கைக்குத்தல் அரிசி ,பழங்கள் உள்ளிட்டவற்றை அதிகம் நாம் எடுக்க வேண்டும். கடைகளில் வாங்கும் உணவுகளை அதிக அளவு எடுத்துக் கொள்ளாமல் அதை தவிர்த்துக் கொள்வது நல்லது. பப்பாளி, மாதுளை, அன்னாசி ,தக்காளி உள்ளிட்ட பழங்களை நாம் உட்கொள்வது புற்றுநோயை தடுக்க நமக்கு உதவியாக இருக்கும்.

இந்த உணவுகள் சாப்பிடுங்க கேன்சர் வராது…!

தக்காளியின் மேல் தோல் சிவந்து நிறத்தைக் கொடுக்கக்கூடிய லைகோபின் சத்துக்கள் நிறைந்த ஒன்றாக உள்ளது . தக்காளி பழத்தின் தோலை நாள் ஒன்றுக்கு, 3,4 பழங்களின் தோலை சாப்பிட்டு வந்தாலே புற்றுநோயின் வீரியம்  வேகமாக பரவுவதை  குறைக்க முடியும்  என்று ஆய்வுகள் கூறுகிறது.

பழங்களை நாம் ஜூஸாக தான் சாப்பிட வேண்டும் என்று இல்லை. பழங்களை நாம் துண்டாக்கி சாப்பிடும்போது இரண்டு பலன்கள் உள்ளது. அதில் கிடைக்கக்கூடிய நார்ப்பொருட்கள் நிறைய; நம் மலச்சிக்கலை சரிசெய்யும். மலச்சிக்கல் அதிகமாக இருந்தாலே அதுவே குடல்களை பாதித்து ஆசன வாயில் புற்றுநோய் வர ஒரு காரணியாக இருக்கிறது என்று கண்டுபிடித்துள்ளார்கள்.

இந்த உணவுகள் சாப்பிடுங்க கேன்சர் வராது…!

தேனீர் அருந்த கூடிய பழக்கம் அனைவருக்கும் உள்ளது .  அந்த வகையில் பச்சைத் தேனீர் புற்று நோய்க்கு மிகச் சிறந்த உணவாக உள்ளது. கிரீன் டீ என்று சொல்லக்கூடிய பச்சைத் தேனீரை பால் கலக்காமல் ஒரு நாளைக்கு 3 அல்லது 6 முறை குடிப்பதன் மூலம் புற்றுநோய் வேகமாக பரவுவதை தடுக்க முடியும். சர்க்கரை சேர்க்காமல் அருந்துவது நல்லது. ஒருவருக்கு புற்றுநோய் இருக்கிறது என்பதை அறிந்தாலே கூடியவரை சர்க்கரையை தவிர்ப்பது நல்லது.

இந்த உணவுகள் சாப்பிடுங்க கேன்சர் வராது…!

அதேபோல் சணல் விதைகள் உண்ணும்போது புற்றுநோய் கட்டுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.  விதையுள்ள பன்னீர் திராட்சையும் புற்றுநோய் அதிகம் வருவதை தவிர்க்கும் என்று கூறப்படுகிறது. எப்பவுமே திராட்சைப் பழத்தை சாப்பிடும்போது வெந்நீரில் நன்றாகக் கழுவி அதன் பிறகு  சாப்பிடும் போது உடல் நலத்திற்கு நல்லது. பன்னீர் திராட்சையை தினம்தோறும் எடுத்துக்கொள்வதன் மூலம் புற்று நோய் வருவதிலிருந்து தவிர்க்கலாம் . அதேபோல் புற்றுநோய் வேகமாக பரவுவதும்  தவிர்க்கப்படும். புற்றுநோய் தனக்கு வரக்கூடாது . எனது குடும்பத்தில் ஒருவருக்கு புற்றுநோய் இருந்தது; ஆனால் அது எனக்கு வரக்கூடாது என்று நினைப்பவர்கள்  இது போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வதுடன்,  துரித உணவுகளை தவிர்ப்பதும், யோகா பயிற்சி மேற்கொள்வது நல்லது.