“சுற்றுலா பயணிகளுக்கு இ-பதிவு முறை தொடரும்” – நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு

 

“சுற்றுலா பயணிகளுக்கு இ-பதிவு முறை தொடரும்” – நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் இ-பதிவு முறை தொடர்ந்து அமலில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக உதகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக அரசு ஏற்கனவே உள்ள இ-பாஸ் நடைமுறையை மாற்றியமைத்து, இ-பதிவு முறையை அமல்படுத்தி உள்ளதாக கூறினார். இதன்படி, வெளி மாவட்டங்களில் இருந்து, உதகைக்கு வருவதற்கு, இ-பதிவு முறை தொடர்ந்து அமலில் உள்ளதாகவும் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

“சுற்றுலா பயணிகளுக்கு இ-பதிவு முறை தொடரும்” – நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு

இதனால் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு சுற்றுலா வருவோர், கட்டாயம் இ-பதிவு செய்து வர வேண்டும் என்றும் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார். மேலும், சுற்றுலா பயணிகள் முகக் கவசம் அணிவது குறித்து மாவட்ட நிர்வாகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் படுவதாக கூறிய அவர், முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.