மீண்டும் இ பாஸ் நடைமுறை!

 

மீண்டும் இ பாஸ் நடைமுறை!

கொரோனா தொற்று அதிகமுள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தனியாகச் செயல்படுகின்ற மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மீண்டும் இ பாஸ் நடைமுறை!

மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். திறந்த வெளிகளில் மீன் சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாகச் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. அதேபோல் அனைத்து அரசு அலுவலகங்களும் 30 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பேருந்துபோக்குவரத்துக்கான தடை நீடிக்கும் நிலையில், டாஸ்மாக், சலூன், தேநீர் கடைகள் திறக்க அனுமதி இல்லை. நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக இ பாஸ் பெற்று பயணிக்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.