“இவர்களுக்கு மட்டும் இ-பாஸ் தேவையில்லை”.. தலைமை செயலாளர் அறிவிப்பு!

 

“இவர்களுக்கு மட்டும் இ-பாஸ் தேவையில்லை”.. தலைமை செயலாளர் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக சென்னை தான் அதிக அளவு பாதிக்கப்பட்ட பகுதி என்பதால், சென்னைவாசிகள் தென்மாவட்டங்களில் இருக்கும் சொந்த இடங்களை நோக்கி சென்ற வண்ணம் இருந்தனர். குறிப்பாக சென்னையில் கொரோனாவை கட்டுபடுத்துவது சவாலாக இருப்பதால், மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதனால் தற்போது அனைத்து மாவட்டங்களும் இ-பாஸை கட்டயாமாக்கியுள்ளன. இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் அந்தந்த மாவட்ட எல்லையிலேயே திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும், முன்னதாக பாஸ் பெற்று இருக்கும் நபர்கள் அதனை புதுப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“இவர்களுக்கு மட்டும் இ-பாஸ் தேவையில்லை”.. தலைமை செயலாளர் அறிவிப்பு!

இந்நிலையில் வரும் 24 ஆம் தேதி நடக்கவிருக்கும் ஐஐடி ஐதராபாத் நுழைவுத் தேர்வு நடைபெற இருக்கிறது. அந்த தேர்வில் கலந்து கொள்வதற்காக செல்லும் மாணவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்றும் நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச்சீட்டை காட்டினால் மாணவர்களை அனுமதிக்குமாறும் தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.