கேரள எல்லைகளில் வாகன சோதனை தீவிரம்… இ-பாஸ் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பிவைப்பு…

 

கேரள எல்லைகளில் வாகன சோதனை தீவிரம்… இ-பாஸ் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பிவைப்பு…

கோவை

கோவை மாவட்டத்திற்கு இ-பாஸ் இன்றி வந்த கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களை, அதிகாரிகள் எல்லை பகுதிகளிலேயே திருப்பி அனுப்பி வருகின்றனர்.

கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்து உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து கோவை மாவட்டத்திற்கு வருவபர்கள் இன்று முதல் இ-பாஸ் மற்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர் ராசாமணி நேற்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இதனை அடுத்து, கேரள மாநில எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள வாலையாறு, ஆனைமுடி, பொள்ளாச்சி உள்ளிட்ட 13 சோதனைச் சாவடிகளில் இன்று அதிகாலை முதலே காவல்துறை, வருவாய் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கேரள எல்லைகளில் வாகன சோதனை தீவிரம்… இ-பாஸ் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பிவைப்பு…

இந்த சோதனையின்போது, இ-பாஸ் மற்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவராத பயணிகளை, கேரளாவிற்கே திருப்பி அனுப்பட்டு வருகின்றனர்.

இதனால் கேரளாவில் இருந்து கோவைக்கு பணி நிமித்தமாகவும், வியாபாரம் தொடர்பாகவும் நாள்தோறும் வந்துசெல்லும் ஆயிரக்கணக்கான கேரள மாநிலத்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.