இபாஸ் முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: முத்தரசன் கோரிக்கை

 

இபாஸ் முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: முத்தரசன் கோரிக்கை

தமிழகத்தில் இபாஸ் முறையை தகர்க்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதனை நீக்க முடியாது என தெரிவித்த முதல்வர், தற்போது இபாஸ் முறையில் தளர்வுகளை அறிவித்துள்ளார். அதாவது திருமணம், இறப்பு, மருத்துவ சேவை உள்ளிட்ட காரணங்களுடன் அத்தியாவசிய பணிகளுக்கும் இபாஸ் வழங்கப்படும் என்றும் ஆதார் அட்டை கொடுத்தால் விண்ணப்பித்த எல்லாருக்கும் தங்கு தடையின்றி இபாஸ் கொடுக்கப்படும் என்றும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார். இபாஸ் முறையில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இபாஸ் முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: முத்தரசன் கோரிக்கை

இந்த நிலையில் இபாஸ் முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இபாஸ் முறையில் அரசு அறிவித்துள்ள தளர்வுகளுக்கு தான் வரவேற்பு அளிப்பதாகவும் மக்களுக்கு இந்த இபாஸ் நடைமுறை பெரும் இன்னலை கொடுத்து வந்ததாகவும் கூறினார். மேலும், இபாஸ் முறையில் தளர்வுகள் அளிப்பதை விட அதனை முழுமையாக ரத்து செய்தால் மக்கள் சிரமம் இல்லாமல் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வார்கள் என்றும் தெரிவித்தார்.