சமயபுரம் கோவிலில் துர்கா ஸ்டாலின்!

 

சமயபுரம் கோவிலில் துர்கா ஸ்டாலின்!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் திமுக தலைவர் முக ஸ்டாலினின் மனைவி துர்கா, இன்று தரிசனம் செய்தார்.

விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் திமுகவின் சிறப்பு பொதுக்கூட்டம் சிறுகனூரில் இன்று மாலை நடைபெற்றது. இதற்காக விமானம் மூலம் திருச்சி வந்த துர்கா ஸ்டாலின் கார் மூலம் சமயபுரம் கோவிலுக்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்தார். சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டட்தை முன்னிட்டு இன்று பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

சமயபுரம் கோவிலில் துர்கா ஸ்டாலின்!

இதையொட்டி கோயிலுக்கு வந்த துர்கா ஸ்டாலின், பூக்கள் அடங்கிய தட்டுக்கள் மற்றும் மாலை அடங்கிய பூ தட்டுகளுடன் வந்து அம்மனுக்கு காணிக்கை செலுத்திவிட்டு சென்றார்.