“தமிழன் இருக்கும் வரை ஸ்டாலின் பெயர் இருக்கும்” – சட்டப்பேரவையில் உள்ளம் பூரித்த துரைமுருகன்!

 

“தமிழன் இருக்கும் வரை ஸ்டாலின் பெயர் இருக்கும்” – சட்டப்பேரவையில் உள்ளம் பூரித்த துரைமுருகன்!

தமிழர் பண்பாட்டு அடையாளங்களை உலகெங்கிலும் பரப்பும் முதல்வர் ஸ்டாலினின் பெயர் தமிழன் இருக்கும் வரையில் நிலைத்து நிற்கும் என சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை விதி எண் 110-ன் கீழ் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழ் சமூகம் கிமு ஆறாம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற சங்க இலக்கியம் சமூகம் என்று கீழடி தொல்லியல் ஆய்வு தெரிவித்தது. தமிழ் வாழ்க என எழுத வைத்தது, தமிழ் வழிபாட்டு உரிமை வழங்கியது, உலகம் முழுவதும் தமிழை பரப்பியது திமுக அரசு தான். கீழடி அகழாய்வு உலகளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. பொருநை ஆற்றங்கரையில் நாகரீகம் 3,700 ஆண்டுகள் பழமையானது என அமெரிக்க ஆய்வு நிறுவனம் முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே, தொல்லியல் அகழாய்வில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்த நெல்லையில் 15 கோடியில் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

“தமிழன் இருக்கும் வரை ஸ்டாலின் பெயர் இருக்கும்” – சட்டப்பேரவையில் உள்ளம் பூரித்த துரைமுருகன்!

மேலும், தமிழர் பண்பாட்டு அடையாளங்களைத் தேடி இனி உலகம் எங்கும் பயணம் செய்வோம். இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் அவையில் முதல்வர் அதிரடியாக அறிவித்தார். முதல்வர் மு.க ஸ்டாலினின் இந்த அறிவிப்பு சட்டசபையில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவையில் பேசிய மூத்த தலைவரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், செம்மொழியில் தமிழைத் தவிர எந்த மொழி உயிரோடு இருக்கிறது?. நமது ஊரின் பெருமை நமக்கு தெரியவில்லை. பானை ஓடுகளும் அதில் உள்ள எழுத்துக்களும் நம்மை காப்பாற்றுகிறது என்றார். மேலும், இன்றைக்கு இருப்போம்… நாளைக்கு ஆட்சி போகும். தமிழன் இருக்கும் வரை மு.க ஸ்டாலின் பெயர் நிலைத்து நிற்கும் என்று கூறி உள்ளம் பூரித்தார்.