தேர்தலில் எனக்கு எதிராக செயல்பட்ட திமுகவினர் பட்டியல் என்னிடம் உள்ளது – துரைமுருகன் பரபரப்பு பேச்சு!

 

தேர்தலில் எனக்கு எதிராக செயல்பட்ட திமுகவினர் பட்டியல் என்னிடம் உள்ளது – துரைமுருகன் பரபரப்பு பேச்சு!

தேர்தலின் போது திமுகவினரே தனக்கு எதிராக செயல்பட்டதாக அமைச்சர் துரைமுருகன் குற்றஞ்சாட்டினார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன். அவருக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தேர்தலின் போது துரைமுருகனுக்கு எதிராக பலர் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அதாவது காட்பாடியில் அவருக்கு எதிராக திமுகவினர் பிரச்சாரம் செய்வதாகவும் தேர்தல் பிரச்சாரத்தின் போது துரைமுருகன் பேசிய கருத்துக்களால் கட்சியினர் அவர் மீது அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்பட்டது. திமுகவினர் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பியும், தேர்தலில் சொற்ப வாக்கு எண்ணிக்கையில் காட்பாடியை கைப்பற்றினார் துரைமுருகன்.

தேர்தலில் எனக்கு எதிராக செயல்பட்ட திமுகவினர் பட்டியல் என்னிடம் உள்ளது – துரைமுருகன் பரபரப்பு பேச்சு!

தேர்தலில் அவரது வெற்றிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில் துரைமுருகன் பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தனது கட்சியினரே தனக்கு எதிராக செயல்பட்டதாக அமைச்சர் துரைமுருகன் கூறியிருப்பது திமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், தேர்தலின்போது பல திமுகவினர் எனக்கு எதிராக செயல்பட்டனர். எனக்கு ஓட்டு போட வேண்டாம் என்று கூறி யாரெல்லாம் எனக்கு எதிராக செயல்பட்டார் என்று எனக்கு தெரியும். எனக்கு ஓட்டு போட வேண்டாம் என்று கூறி காசு கொடுத்தவர்களின் பட்டியலும் என்னிடம் உள்ளது என்று அதிரடியாக பேசினார்.