அரசையும், காவல்துறையையும் கையில் வைத்துக்கொண்டு அமைச்சர்களே சட்டம் ஒழுங்கு புகார் கூறுவதா? – துரைமுருகன்

 

அரசையும், காவல்துறையையும் கையில் வைத்துக்கொண்டு அமைச்சர்களே சட்டம் ஒழுங்கு புகார் கூறுவதா? – துரைமுருகன்

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை முடிந்து கடந்த 27ஆம் தேதி விடுதலையான சசிகலா, நாளை சென்னை வர உள்ளார். சசிகலாவை வரவேற்பதற்காக அமமுகவினர் தீவிர ஏற்பாடுகளை செய்துள்ளனர். சசிகலா நாளை வரும் போது, சென்னையில் பேரணி நடத்த அமமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சூழலில் நாளை பெங்களூரில் இருந்து தமிழகம் வரும் சசிகலா மீது அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்டோர் இருமுறை டிஜிபி திரிபாதியிடம் புகாரளித்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க முயற்சி செய்வதாக தினகரன், சசிகலா மீது அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார். சசிகலாவுக்காக 100 பேர் மனித வெடிகுண்டாக மாறுவோம் என மிரட்டல் விடுக்கிறார்கள் என்றும் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்திருந்தார்.

அரசையும், காவல்துறையையும் கையில் வைத்துக்கொண்டு அமைச்சர்களே சட்டம் ஒழுங்கு புகார் கூறுவதா? – துரைமுருகன்

இந்நிலையில் அரசையும், காவல்துறையையும் கையில் வைத்துக்கொண்டு அமைச்சர்களே சட்டம் ஒழுங்கு சரியில்லை என புகார் கூறுவதா? என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “போலீஸ், இலாகாவை கையில் வைத்திருக்கிறார்கள். முதலமைச்சர் ஆர்டர் போட்டால் டிஜிபி வருகிறார். அனைத்து அதிகாரிகளும் வருவர். அவரே இப்படி ஒரு புகாரை தெரிவித்திருப்பது வேதனை அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.