‘தொண்டனாக இருந்து பெரும் பதவியை அடைந்திருக்கிறேன்’.. துரைமுருகன் உருக்கம்!

 

‘தொண்டனாக இருந்து பெரும் பதவியை அடைந்திருக்கிறேன்’.. துரைமுருகன் உருக்கம்!

திமுகவின் தொண்டனாக இருந்து பொதுச் செயலாளர் என்னும் பெரும் பதவியை அடைந்திருக்கிறேன் என துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

திமுகவின் பொதுச்செயலாளராக இருந்த பேராசியர் க.அன்பழகனின் மறைவுக்கு பிறகு அவரது பதவிக்கு வேறொருவரை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் நிலவியது. தற்போது திமுகவில் மூத்த நிர்வாகி மற்றும் பொருளாளரான துரைமுருகனுக்கு அந்த பதவி வழங்கப்படும் என பரபரப்பாக பேசப்பட்டது. அதன் படியே அவருக்கு அந்த பதவி வழங்கப்பட்டு, பின்னர் நீக்கப்பட்டது. அதனால் திமுகவின் பொருளாளர் பதவிக்கும் பொதுச் செயலாளர் பதவிக்கும் நிர்வாகியை தேர்வு செய்ய வேண்டியுள்ளது.

‘தொண்டனாக இருந்து பெரும் பதவியை அடைந்திருக்கிறேன்’.. துரைமுருகன் உருக்கம்!

இதற்காக வரும் 9 ஆம் தேதி பொதுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது என்றும் அக்கூட்டத்தில் திமுகவின் பொருளாளரும் பொதுச் செயலாளரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என முக ஸ்டாலின் அறிவித்தார். அதே போல அந்த பதவிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று முதல் ஆரம்பமாகும் எனவும் தெரிவித்திருந்தார். அதன் படி இன்று பொருளாளர் பதவிக்கு டிஆர் பாலுவும், பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துரைமுருகன், திமுகவில் சாதாரணமான தொண்டனாக இருந்து பொதுச் செயலாளர் என்ற பெரிய பதவியை அடைந்துள்ளேன் என்றும் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், க. அன்பழகன் இருந்த பதவியில் தானும் போட்டியிடுவதே சிறப்புமிக்கது என்றும் உருக்கத்துடன் கூறினார்.