அதிக முறை ஒரே தொகுதியில் போட்டியிட்ட பெருமைக்கு சொந்தக்காரரான துரைமுருகன்!

 

அதிக முறை ஒரே தொகுதியில் போட்டியிட்ட பெருமைக்கு சொந்தக்காரரான துரைமுருகன்!

திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் 10-வது முறையாக காட்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார்.

காட்பாடியில் பத்தாவது முறையாக களம் காண்கிறார் துரைமுருகன். தற்கால அரசியல்வாதிகளில் அதிக முறை போட்டியிட்டது இவராகத்தான் இருக்கும்.

நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக மெகா கூட்டணி அமைத்துள்ளது. திமுகவில் மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மமக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, கொமதேக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்கள் உட்பட உதயசூரியன் சின்னத்தில் திமுக 187 தொகுதிகளில் களம் காண்கிறது.

அதிக முறை ஒரே தொகுதியில் போட்டியிட்ட பெருமைக்கு சொந்தக்காரரான துரைமுருகன்!

திமுக துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் 10வது முறையாக காட்பாடி தொகுதியில் போட்டியிடவுள்ளார். இந்த முறை இவர் அதிமுக சார்பில் போட்டியிடும் ராமுவை எதிர்த்து திமுக மூத்த தலைவரான துரைமுருகன் சட்டப்பேரவைத் தேர்தலில் 11 முறை களம் கண்டவர். ஏற்கெனவே 9 முறை காட்பாடி தொகுதியிலும் 2 முறை ராணிப்பேட்டை தொகுதியிலும் துரைமுருகன் போட்டியிட்டுள்ளார். இதன்மூலம் அதிக முறை ஒரே தொகுதியில் போட்டியிட்ட பெருமைக்கு சொந்தக்காரராகியுள்ளார் துரைமுருகன்.