மும்பை துறைமுகத்தில் சிக்கிய ரூ.1000 கோடி போதைப் பொருள்!

 

மும்பை துறைமுகத்தில் சிக்கிய ரூ.1000 கோடி போதைப் பொருள்!

மும்பை துறைமுகத்தில் ரூ.1000 கோடி மதிப்புடைய 191 கிலோ போதைப் பொருளை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை துறைமுகம் வழியாக பல கோடி மதிப்புடைய போதைப் பொருள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

மும்பை துறைமுகத்தில் சிக்கிய ரூ.1000 கோடி போதைப் பொருள்!

இதன் அடிப்படையில் சுங்கத் துறையுடன் சேர்ந்து வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மும்பை துறைமுகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆப்கானிஸ்தானிலிருந்து ஈரான் வழியாக வந்த சரக்கை சோதனை செய்த போது 191 கிலோ ஹெராயின் போதை மருந்து சிக்கியது. இதன் மதிப்பு ரூ.1000 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு 14 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பை துறைமுகத்தில் சிக்கிய ரூ.1000 கோடி போதைப் பொருள்!
இவர்கள் இருவரும் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி ஏஜெண்டாக இருந்து வந்துள்ளனர். பிளாஸ்டிக் பைப்பிள் ஹெராயின் போதை மருந்தை அடைத்து, மூங்கில் போல பெயிண்ட் செய்து அதை அனுப்பியுள்ளனர். ஆயுர்வேத மூலிகைப் பொருள் என்று குறிப்பிட்டு அந்த பார்சல் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி, மும்பையைச் சேர்ந்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தேடுதல் வேட்டையில் சிக்கிய மிகப் பெரிய அளவிலான சம்பவங்களுள் இதுவும் ஒன்று என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.